Home
News

இது போதுமே அம்பானி சார்.. ரூ.545 போதும்.. கேமிங் சந்தா.. ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் டேட்டா!

ஜியோ (jio) நிறுவனத்தின் கேமிங் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா மற்றும் கேமிங் சந்தா கிடைக்கிறது. இந்த ஜியோ கேமிங் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தில் ஓடிடி திட்டங்கள், டேட்டா திட்டங்கள், வாய்ஸ் கால்கள் திட்டங்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்கள் என்று பிரத்யேக திட்டங்கள் இருக்கின்றன. இதேபோல கேமிங் பிரியர்களுக்கும் பிரத்யேக திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஜியோ ரூ 545 திட்டம் பட்டைய கிளப்பும் சலுகைகளை கொடுக்கிறது.

இது போதுமே அம்பானி சார்.. ரூ.545 போதும்.. அன்லிமிடெட் டேட்டா!

ஜியோ ரூ 545 திட்ட சலுகைகள் (Jio Rs 545 Plan Offers): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த தினசரி டேட்டா போக 5 ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்படுகிறது. மேலும் தினசரி டேட்டா 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகைகள் மட்டுமல்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G) சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இப்போது கேமிங் சலுகைகளுக்கு வருவோம். இந்த ஜியோ திட்டத்தில் ஜியோ கேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு பிஜிஎம்ஐ (BGMI) சலுகை கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இந்த கேமிங்களை மொபைல் மட்டுமல்லாமல் பிசி (PC) மற்றும் லேப்டாப் (Laptop) ஆகியவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுபோக 500-க்கும் மேற்பட்ட கேமிங்கள் கிடைக்கிறது. இந்த கேம்களை எச்டி ரெசொலூசனில் விளையாடிக் கொள்ளலாம். இறுதியாக பிஜிஎம்ஐ ஸ்கின் கூப்பன் (BGMI Skin Coupon) கிடைக்கிறது. இந்த கூப்பனை மைஜியோ (MyJio) ஆப் மூலம் கேட்களாக மாற்றி, அதை பிஜிஎம்ஐ ரிவார்ட்ஸ் பேஜ் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி ஏராளமான கேமிங் சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது.

இதுபோக இதில் ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆகவே இதில் ஃபேன்கோட் (FanCode) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தா மட்டுமல்லாமல் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இதில் பேன்கோடட சந்தாவை ஒரு மாதத்துக்கும், ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை 90 நாட்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இறுதியாக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாவும் இதில் கிடைக்கிறது. இப்படி ஏராளமான சலுகைகளை இந்த ஜியோ திட்டம் கொடுக்கிறது. இதேபோல பல்வேறு கேமிங் திட்டங்கள் ஜியோவில் கிடைக்கிறது. இதில் உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப கிடைக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

இந்த ஜியோ திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) அதிகப்படியான டேட்டா, தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், கேமிங் சலுகைகள் பிளஸ் ப்ரீமியம் ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது. ஆகவே ஒரே திட்டத்தில் உங்களால் பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொள்ள முடிகிறது. இதனால் இது லாபம் தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 545 Plan Offers Unlimited Voice Calls 2GB Daily Data Check Gaming Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X