ஜியோ சிம் கார்டு இருக்கா.. விலை ஏத்துன கையோடு ரூ.51-க்கு கொடுத்த புது திட்டம்.. குளிர்ந்துபோன ஜியோ கஸ்டமர்கள்!
ஜியோவில் (Jio) பல்வேறு போஸ்ட்பெய்ட் (Postpaid) மற்றும் ப்ரீபெய்ட் (Prepaid Plans) திட்டங்களின் விலையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படிருக்கும் நேரத்தில், ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் குளிர்விக்கும்படி வெறும் ரூ.51 விலையில் தட்டித்தூக்கும் படியான திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரூ.51 மட்டுமல்லாமல், ரூ.101 மற்றும் ரூ.151 என்று விலையிலும் கூடுதலாக 2 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, இந்த புதிய திட்டங்களின் சலுகைகள் என்ன? வேலிடிட்டி எப்படி கிடைக்கிறது உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 51 திட்ட விவரங்கள் (Jio Rs 51 Plan Details): இந்த புதிய டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் வருகின்றன. ஆகவே, 3 ஜிபிக்கான 4ஜி டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த பூஸ்டர் திட்டத்தில் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. 1.5 ஜிபிக்கு அதிகமான டேட்டா அல்லது 1 மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வைத்திருக்கும் ஜியோ கஸ்டமர்கள் இந்த புதிய டேட்டா திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல மற்ற திட்டங்களுக்கும் சலுகைகள் கிடைக்கிறது.
ஜியோ ரூ 101 திட்ட விவரங்கள் (Jio Rs 101 Plan Details): இந்த டேட்டா பூஸ்டர் திட்டத்திலும் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 6 ஜிபி 4ஜி டேட்டா சலுகையும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெறுவதற்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா கொண்ட திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.
அல்லது 1 மாதத்துக்கு மேல் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வைத்திருக்க வேண்டும். இதுகிட்டத்தட்ட ரூ.61 மதிப்பில் வழங்கப்பட்ட பழைய திட்டத்தை போலவே இருக்கிறது. ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை இந்த திட்டம் கொண்டிருக்கிறது. இப்போது அதிக விலை கொண்ட டேட்டா பூஸ்டர் திட்டத்தை பார்ப்போம்.
ஜியோ ரூ 151 திட்ட விவரங்கள் (Jio Rs 151 Plan Details): இந்த டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 9 ஜிபிக்கான 4ஜி டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் பேஸ் ஆக்டிவ் திட்டத்தில் கிடைக்கும் வேலிடிட்டி வரையில் சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆகவே, 1.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 2 மாதங்களுக்கு நிகரான வேலிடிட்டி கொண்ட ஆக்டிவ் திட்டங்களை வைத்திருக்கும் ஜியோ கஸ்டமர்களுக்கு இந்த டேட்டா திட்டம் கிடைக்கிறது. இதுபோக ஏற்கனவே இருக்கும் டேட்டா பூஸ்டர் திட்டங்களும் இருக்கின்றன. இவற்றின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
ரூ.19 விலையில் கிடைக்கும் டேட்டா திட்டத்தில் 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி கிடைக்கிறது. ரூ.29 மதிப்பிலான டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 2 ஜிபிக்கான டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் ஆக்டிவ் திட்ட வேலிடிட்டி வருகிறது. முன்பு ரூ.61 மதிப்பில் கிடைத்த டேட்டா பூஸ்டர் திட்டம் இப்போது ரூ.69 விலையில் கிடைக்கிறது.
இந்த திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கிடைக்கும். இறுதியாக ரூ.139 விலையில் 12 ஜிபி டேட்டா திட்டம் ஆக்டிவ் வேலிடிட்டியோடு கிடைக்கிறது. இந்த அனைத்து டேட்டா திட்டங்களுக்கும் 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








