அட இது தெரியாம போச்சே.. Jio வின் 51 ரூபாய் 5ஜி பிளான்.. ரீசார்ஜ் செய்தால் என்ன கிடைக்கும்?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பல திட்டங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) வழங்குகின்றன என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமென்றால்.. அதே ஜியோ சேவையின் கீழ் வெறும் ரூ.51 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு 5ஜி ப்ரீபெய்ட் பிளானை (Jio Rs.51 5G Prepaid Plan) பற்றியும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஒருவேளை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.51 5ஜி ப்ரீபெய்ட் திட்டம் பற்றி உங்களுக்கு ஐடியாவே இல்லை என்றால்.. கவலையே வேண்டாம் - இது என்ன திட்டம்? ரூ.51 க்கு இதை ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஜியோ கஸ்டமர்களுக்கு என்ன கிடைக்கும்? என்று விரிவாக பார்க்கலாம்.

முதல் மற்றும் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூ.51 ஆனது ஒரு வழக்கமான ப்ரீபெய்ட் திட்டம் அல்ல. அதாவது இது சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரவில்லை. அதே சமயம் இது சில நிபந்தனைகளுடன் (Terms of conditions) வருகிறது.அந்த நிபந்தனைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடிந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் அன்லிமிடெட் 5ஜி-ஐ (Unlimited 5G) பெறுவீர்கள்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.51 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஜியோ நிறுவனத்தின் ஒரு மேம்படுத்தல் திட்டம் (Upgrade plan) ஆகும். அதாவது பெயர் குறிப்பிடுவது போல - இந்த மேம்படுத்தல் திட்டமானது 4ஜி திட்டங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை 5ஜி க்கு மாற்ற அனுமதிக்கிறது.
இப்போதைக்கு 2ஜிபி டெய்லி டேட்டாவுடன் (Daily 2GB Data) வரும் திட்டங்களுடன் மட்டுமே ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை அணுக கிடைக்கிறது. எனவே நீங்கள் ஜியோவின் 5ஜி சேவையை விரும்பும் ஒருவராக இருந்து, 1.5ஜிபி டெய்லி டேட்டா (Daily 1.5GB) திட்டத்துடன் ரீசார்ஜ் செய்திருந்தால், நீங்கள் ரூ.51-ஐ ரீசார்ஜ் செய்வதன் மூலம் 5ஜி சேவைக்கு அப்கிரேட் ஆக முடியும்.
ரூ.51 திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கான நிபந்தனைகள் மற்றும் ரீசார்ஜ் செய்த பின் கிடைக்கும் நன்மைகள்:
1. வாடிக்கையாளர் 1.5ஜிபி டெய்லி டேட்டா மற்றும் 1 மாதம் வரை செல்லுபடியாகும் ஆக்டிவ் ஆக உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து இருக்க வேண்டும்
2. உங்களுடைய ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவை (5G Supported Smartphone) கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க்கில் இணைக்கப்படும்போது வரம்பற்ற 5ஜி டேட்டா நன்மை கிடைக்கும்
3. எப்யுபி (FUP) என்கிற நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் (Fair usage policy) கீழ் டேட்டா பயன்படுத்தப்பட்ட பின்னர் 4ஜி டேட்டாவின் வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறையும்.
4. ரூ.51-ஐ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளருக்கு 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா கிடைக்கும்
5. ஜியோவின் கீழ் கிடைக்கும் 5ஜி டேட்டாவிற்கு எந்த லிமிட்டும் இல்லை
ரூ.51 மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மேலும் இரண்டு 5ஜி மேம்படுத்தல் திட்டங்களை வழங்குகிறது. அவைகள் ரூ.101 மற்றும் ரூ.151 திட்டங்கள் ஆகும். இந்த 3 திட்டங்களுமே அனைத்தும் நுகர்வோருக்கு வரம்பற்ற 5ஜி-ஐ மட்டுமல்ல, ஓரளவு 4ஜி டேட்டாவையும் வழங்குகின்றன. ரூ.51, ரூ.101 அல்லது ரூ.151 என நெனெகல் எந்த 5ஜி மேம்படுத்தல் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்தாலும், அது உங்கள் பேஸிக் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வேலிடிட்டி உடன் காலாவதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








