ஏர்டெல் ரூ.489 திட்டம் vs ஜியோ ரூ.500 திட்டம்.. என்னென்ன சலுகைகள்? எது சிறந்தது?
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.500-க்கும் கீழ் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஏர்டெல்லின் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம் என்னென்ன சலுகைகளை வழங்குகின்றன, எது சிறந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 489 Prepaid Plan) மொத்தமாக 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 77 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV) போன்ற பல முக்கிய ஓடிடி சந்தாக்களைப் பெற முடியும். இதுதவிர லைவ் டிவி சேனல்களும் இந்த ஏர்டெல் ரூ.489 திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக 600 எஸ்எம்எஸ், ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள Adobe Express Premium போன்ற நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. டேட்டா நன்மையை தவிர மற்ற அனைத்து சலுகைகளும் இந்த ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கின்றன.
ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 500 Prepaid Plan) 1000-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களை வழங்குகிறது. இதில் பிரீமியம் சேனல்களான சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) மற்றும் வார்னர் ப்ரோஸ் (Warner Bros) சேனல்களும் கிடைக்கும்.
டிஸ்கவரி (Discovery) மற்றும் ஈடிவி நெட்வொர்க் (ETV Network) போன்ற பல சேனல்களும் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ டிவி ஆப் மூலம் இந்த ஒட்டுமொத்த நேரலை டிவி சேனல்களையும் பார்த்துக் கொள்ளலாம்.
அதேபோல் யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Video Mobile), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகியவை இந்தத் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் ஈடிவி வின் (ETVWin) போன்ற ஓடிடி சந்தாக்கள் இந்த ஜியோ ரூ.500 திட்டத்தின் மூலம் கிடைக்கும்.
ஃபேன்கோட் (FanCode), சாவ்பால் (Chaupal), டைம்ஸ் பிளே (Times Play), தாரங் பிளஸ் (Tarang Plus) போன்ற சந்தாக்களும் இந்தத் திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா மற்றும் 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பிரீமியம் அணுகலும் இந்த ஜியோ ரூ.500 திட்டத்தின் மூலம் கிடைக்கிறது.

12 மாதங்களுக்கான கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக, ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் (Validity) 28 நாட்கள் ஆகும். எனவே இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.
எது சிறந்தது?
டேட்டா தேவையில்லை, அழைப்பு வசதிகள் மட்டும் 77 நாட்களுக்கு போதும் என நினைப்பவர்கள் ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் ஓடிடி சந்தா, லைவ் டிவி சேனல்கள், டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஜியோவின் ரூ.500 திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு திட்டங்களுக்கும் அதிக நன்மைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications
