ஜியோ சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? 1000 லைவ் டிவி சேனல்கள்.. ஓடிடி.. அள்ளி தரும் 3 ப்ரீபெய்ட் திட்டங்கள்..
ஜியோ நிறுவனம் கடந்த சில மாதங்களில் ஓடிடி சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்கள் தரும் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற திட்டங்களில் பலர் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது ஜியோ நிறுவனம் ஓடிடி சந்தா மற்றும் லைவ் சேனல்கள் தரும் மூன்று சிறந்த திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.500 திட்டம் (Jio Rs 500 Plan) 1000-க்கும் மேல் லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது. இதில் பிரீமியம் சேனல்களுடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) மற்றும் வார்னர் ப்ரோஸ் (Warner Bros) சேனல்கள் கிடைக்கும்.

மேலும் டிஸ்கவரி (Discovery) மற்றும் ஈடிவி நெட்வொர்க் (ETV Network) போன்ற பல சேனல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ டிவி ஆப் மூலம் இந்த ஒட்டுமொத்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.
யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Video Mobile), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5) இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் ஈடிவி வின் (ETVWin) போன்ற ஓடிடி சந்தா இந்த ஜியோ ரூ.500 திட்டம் மூலம் கிடைக்கும்.
இதுதவிர சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), டைம்ஸ் பிளே (Times Play), தாரங் பிளஸ் (Tarang Plus) போன்ற சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா, 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பிரீமியம் அணுகல் இந்த ஜியோ ரூ.500 திட்டம் மூலம் கிடைக்கிறது.
குறிப்பாக 12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.
ஜியோவின் ரூ.550 திட்டம் (Jio Rs 550 Plan) என்பது டேட்டா பேக் திட்டம் ஆகும். ஆகவே, இதை பயன்படுத்த உங்களிடம் பேஸ் திட்டம் இருக்க வேண்டும். அதுவும் இந்த திட்டம் 90ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது. மேலும் இந்த டேட்டாவுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல இந்த திட்டத்தில் லைவ் டிவி மற்றும் ஓடிடி ஆப்களுக்கும் கிடைக்கும்.
ஜியோ ரூ.550 திட்டம் ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.
குறிப்பாக ஜியோ டிவி ஆப் மூலம் இந்த ஒட்டுமொத்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ லைட், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.550 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் ரூ.550 திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்காது. எனவே ஓடிடி மற்றம் லைவ் சேனல்கள் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஜியோ ரூ.2000 திட்டம் (Jio Rs 2000 Plan) ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன. இந்த சேனல்களை ஜியோ டிவி (Jio TV) ஆப் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

அதேபோல் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ லைட், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.2000 ப்ரீபெய்ட் திட்டம்.
அதுவும் ஜியோவின் ரூ.2000 திட்டம் மொத்தமாக 365ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் 1 வருட ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
