Home
News

ஜியோவின் செம்ம பிளான்.. கம்மி பட்ஜெட்ல 1000 டிவி சேனல்கள்.. 15 ஓடிடி சந்தா.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா..

ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜியோ (Jio) நிறுவனம் பட்ஜெட் விலையில் ஓடிடி சந்தா உடன் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது இதுபோன்ற ஓடிடி சந்தாவுடன் வரும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குத் தான் அதிக வரவேற்பு உள்ளது.

அதேபோல் ஜியோ நிறுவனத்தின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஓடிடி சந்தா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்குகிறது. இங்கே இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் செம்ம பிளான்.. கம்மி பட்ஜெட்ல 1000 டிவி சேனல்கள்..

ஜியோ நிறுவனத்தின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 500 Prepaid Plan) ஆனது 1000-க்கும் மேல் லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது. அதுவும் இதில் பிரீமியம் சேனல்களுடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) மற்றும் வார்னர் ப்ரோஸ் (Warner Bros) சேனல்கள் கிடைக்கும்.

அதுவும் டிஸ்கவரி (Discovery) மற்றும் ஈடிவி நெட்வொர்க் (ETV Network) போன்ற பல சேனல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ டிவி ஆப் மூலம் இந்த ஒட்டுமொத்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பாக யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Video Mobile), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5) இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் ஈடிவி வின் (ETVWin) போன்ற ஓடிடி சந்தா இந்த ஜியோ ரூ.500 திட்டம் மூலம் கிடைக்கும்.

இதுதவிர சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), டைம்ஸ் பிளே (Times Play), தாரங் பிளஸ் (Tarang Plus) போன்ற சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா, 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பிரீமியம் அணுகல் இந்த ஜியோ ரூ.500 திட்டம் மூலம் கிடைக்கிறது.

12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

அதிக ஓடிடி நன்மைகள், லைவ் டிவி சேனல்கள், வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை பட்ஜெட் விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இப்போது ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோவின் செம்ம பிளான்.. கம்மி பட்ஜெட்ல 1000 டிவி சேனல்கள்..

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தா, கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) சந்தா ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 500 Prepaid Plan Offers 1000 Live TV Channels, 15 OTT Subscriptions and 28 Day Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X