ரூ.500 கொடுங்க.. 28 நாட்களில் அம்பானி போட்ட போடு.. 2 ஜிபி டேட்டா.. 12 ஓடிடி சந்தா.. வாய்ஸ் கால்கள்!
ஒட்டுமொத்த பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா (Premium OTT Subscription) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ்கள், கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட நம்ம முடியாத சலுகைகளை முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் கொடுத்து உள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ நிறுவனத்தில் அன்லிமிடெட் 5ஜி திட்டங்கள், என்டர்டெயின்மென்ட் திட்டங்கள், வேல்யூ திட்டங்கள், கேமிங் திட்டங்கள் என்று பல்வேறு விருப்பங்களின் கீழ் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் என்டர்டெயின்மென்ட் திட்டங்களின் கீழ் கிடைக்கும் ஜியோ ரூ.500 திட்டம் (Jio Rs 500 Plan) ஆனது ஓடிடி பிரியர்களால் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.

அதிலும், வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளுடன் பிரீமியம் ஓடிடி ஆப்கள் கிடைப்பதால், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஒரே திட்டத்தில் 12+ பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். நெட்பிளிக்ஸ் சந்தா மட்டும் கொடுக்கப்படவில்லை. மற்றபடி அமேசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார், யூடியூப் பிரீமியம் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.
மேலும், ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்படும். ஓடிடி ஆப்களுக்கு 28 நாட்கள் மட்டுமே சந்தா கிடைக்கும். ஆனால், ஜெமினி ப்ரோவுக்கு 18 மாதங்கள் சந்தா கொடுக்கப்படும். எந்தெந்த ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். டேட்டா சலுகைகள் மற்றும் கூடுதல் சலுகைகள் எப்படி இருக்கும் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
இந்த என்டர்டெயின்மென்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படும். இந்த ஓடிடிகளை 28 நாட்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், ஜியோ டிவி (Jio TV) ஆப் வழியாக ஏகப்பட்ட ஓடிடி ஆப்களை அணுக முடியும். இதில் சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT) ஆப்கள் கிடைக்கின்றன. மேலும், கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode) உள்ளது.
ஹோய்சோய் (Hoichoi) கிடைக்கிறது. இந்த ஓடிடி ஆப்களுக்கும் 28 நாட்களுக்கு சந்தா கிடைக்கும். கூடுதல் சலுகைகளை பார்க்கையில், 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கும்படி ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா கொண்ட ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது.
இந்த ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகள் மட்டுமல்லாமல், 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. அதேபோல 28 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இதை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம்.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களும், 100 எஸ்எம்எஸ்களும் 28 நாட்களுக்கு கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் சந்தா மட்டும் கிடைக்கவில்லை. இருப்பினும், மற்ற பீரிமியம் ஓடிடி ஆப்கள் மொத்தமும் கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற திட்டமாகவே இருக்கிறது. கூடுதலாக வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் கிடைப்பதால், விலைக்கு ஏற்ப இருக்கிறது.


Click it and Unblock the Notifications








