Home
News

கேபிள் TV, DTH-ஐ முடித்த அம்பானி.. சன் TV, KTV உடன் 1000+ லைவ் சேனல்கள்.. 11+ ஓடிடி சந்தா.. 28 நாட்கள் சந்தா!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பொழுதுபோக்கு திட்டங்களில் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களுடன் அடுத்தடுத்து திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஆக்டிவ் பேஸ் திட்டம் இல்லாமலேயே வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், தினசரி டேட்டாவுடன் லைவ் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்களை இந்த 2 திட்டங்கள் கொடுக்கின்றன.

ஜியோ ரூ.500 திட்ட விவரங்கள் (Jio Rs 500 Plan Details): ஜியோ ரூ.500 திட்டம் ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை கொடுக்கிறது. இதில் பிரீமியம் சேனல்களுடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) மற்றும் வார்னர் ப்ரோஸ் (Warner Bros) சேனல்கள் கிடைக்கும். மேலும், டிஸ்கவரி (Discovery) மற்றும் ஈடிவி நெட்வொர்க் (ETV Network) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.

கேபிள் TV, DTH-ஐ முடித்த அம்பானி.. சன் TV, KTV உடன் 1000+ லைவ் சேனல்!

ஓடிடி சந்தாவில் யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Video Mobile), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5) கொடுக்கப்படுகிறது. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் ஈடிவி வின் (ETVWin) கிடைக்கிறது.

மேலும், சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), டைம்ஸ் பிளே (Times Play), தாரங் பிளஸ் (Tarang Plus) ஆகிய ஓடிடி சந்தாவையும் இந்த ஜியோ ரூ.500 திட்டம் வழங்குகிறது. ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) வழங்குகிறது.

100 எஸ்எம்எஸ்கள் உள்ளன. ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தாவை கொடுக்கிறது. நானோ பனானா (Nano Banana), 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பிரீமியம் அணுகல் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும்.

ஜியோ ரூ.445 திட்ட விவரங்கள் (Jio Rs 445 Plan Details): இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) மற்றும் சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) சந்தாவை இந்த ஜியோ ரூ.445 திட்டம் ஆனது கொடுக்கிறது.

மேலும், பிளானட் மாராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஓடிடி ஆப்களும் வருகின்றன. முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் அந்த டேட்டா தீர்ந்து போன பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. பேன்கோட் (FanCode), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) உள்ளது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கொடுக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா கிடைக்கும். நானோ பனானா (Nano Banana), 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இந்த 2 திட்டங்களுக்கு ஆக்டிவ் பேஸ் ப்ரீபெய்ட் திட்டம் தேவை கிடையாது.

Best Mobiles in India

English summary
Jio Rs 500 Plan With 28 Days Validity 1000 TV Channels 11 OTT 56GB Data Check Mega Content Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X