ரூ.500 இருக்கா.. அதுக்குள்ள முடிச்சு விட்ட அம்பானி.. வாய்ஸ், டேட்டா மட்டுமில்ல.. மொத்த OTT சந்தாவும் இருக்கு!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களில் ஓடிடி பிரியர்களாக இருப்பவர்கள் ரூ.500 வைத்து இருந்தால், அவர்களுக்கு மல்டி ஓடிடி ஆப்களுடன் 2 திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. இதில் எந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கலாம். இதில் கிடைக்கும் சலுகைகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு எதை ரீசார்ஜ் செய்யலாம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஜியோ ரூ.500 திட்ட ஓடிடி சந்தா
யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் டிவி / மொபைல் (JioHotstar TV/Mobile), சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery Plus), சன்நெக்ஸ்ட் (SunNXT) மற்றும் கான்ச்சா லங்கா (Kanchha Lannka) ஆப்கள் கிடைக்கின்றன.

பிளானட் மராத்தி (Planet Marathi) கிடைக்கும். சாவ்பால் (Chaupal), பேன்கோட் (FanCode) மற்றும் ஹோய்சோய் (HoiChoi) ஓடிடி ஆப்களும் கிடைக்கும். இதில் பிரீமியம் ஓடிடி ஆப்களை தவிர மற்ற ஆப்களானது, ஜியோடிவி (JioTV) ஆப் வழியாக பயன்படுத்த கிடைக்கும். இதைவிட மலிவான விலைக்கு மல்டி ஓடிடி ஆப்களை பின்வரும் திட்டம் கொடுக்கிறது.
ஜியோ ரூ.445 திட்ட ஓடிடி சந்தா
ஜியோ டிவி ஆப் வழியாக சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன்நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி, சாவ்பால், பேன்கோட் மற்றும் ஹோய்சோய் ஆப்கள் கிடைக்கின்றன. ஆகவே, இதில் பிரீமியம் ஓடிடி ஆப்கள் கொடுக்கப்படவில்லை. இந்த ஓடிடி ஆப்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
பொதுவான சலுகைகள்
ஓடிடி ஆப்களில் மட்டுமே மாற்றங்கள் இருக்கிறது. மற்ற சலுகைகளில் எந்த மாற்றமும் கிடையாது. ஆகவே, இந்த திட்டங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) கொடுத்து உள்ளன.
மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு செய்து கொள்ள கிடைக்கும். இந்த சலுகைகளுக்கும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஓடிடி ஆப்களை போலவே டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
கூடுதல் சலுகைகள்
ஜியோ ஸ்பெஷல் ஆஃபரில் கீழ் சில கூடுதல் சலுகைகளை இந்த 2 திட்டங்களும் கொடுத்து உள்ளன. இது திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகள் கிடையாது. அண்மையில் சேர்க்கப்பட்ட சலுகையாக இருக்கிறது. இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (JioHotstar Mobile / TV Subscription) மூன்று மாதங்களுக்கு கிடைக்கும்.
ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) அணுகல் வழியாக 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கும். மேலும், 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவையும் இந்த திட்டம் கொடுத்து உள்ளது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35,100ஆக உள்ளது. இதில் 2000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா உள்ளிட்ட பல்வேறு அணுகல்கள் கிடைக்கின்றன.
எந்த திட்டம் பெஸ்ட்?
பிரீமியம் ஓடிடி ஆப்கள் வேண்டுமானால், முதலில் பார்த்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சோனிலிவ், ஜீ5 போன்ற ஆப்கள் மட்டுமே போதுமானால், 2ஆவது திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக இருப்பதால், ஓடிடியின் அடிப்படையில் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








