Home
News

1000+ டிவி சேனல்கள்.. 12+ ஓடிடிகள்.. ரூ.200-க்கு முடித்த அம்பானி.. 28 நாட்கள் வேலிடிட்டி.. 30 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு லைவ் டிவி சேனல்களை (Live TV Channels) கொடுக்கும் திட்டம் மலிவான விலைக்கு கிடைக்கிறது. பிரீமியம் ஓடிடி ஆப்களுடன் 1000+ லைவ் டிவி சேனல்களையும் பார்த்து கொள்ளலாம். ஆனால், இது ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் டிவி சேனல்களாக இருக்கிறது.

ஜியோ ரூ.200 திட்ட விவரங்கள் (Jio Rs 200 Plan Details): ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு டேட்டா மற்றும் ஓடிடி சந்தா கொண்ட திட்டமாக இது கிடைக்கிறது. ஆகவே, ஏற்கனவே கஸ்டமர்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தை பெற்ற பிறகு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

1000+ டிவி சேனல்கள்.. 12+ ஓடிடிகள்.. ரூ.200-க்கு முடித்த அம்பானி!

இந்த நாட்களில் 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். பிறகு 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா கிடைக்கும். யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) கிடைக்கும்.

மேலும், டிஸ்கவரிபிளஸ் (Discovery+) மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மாராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கேட் (FanCode) மற்றும் ஜியோ டிவி (JioTV) ஆப்களை பயன்படுத்தலாம். 1000+ டிவி சேனல்களும் இந்த திட்டத்தில் கொடுக்கப்படும்.

ஒருவேளை வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளுடன் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்கள் வேண்டுமானால் ரூ.500 திட்டம் இருக்கிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி டேட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படும். வேலிடிட்டி ஒரே மாதிரியாக இருக்கும்.

ஜியோ ரூ.500 திட்ட விவரங்கள் (Jio Rs 500 Plan Details): யூடியூப் பிரீமியம், பிரைம் வீடியோ மொபைல், ஜியோஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரிபிளஸ், சன்நெக்ஸ்ட், தாரங்பிளஸ், ஈடிவிவின், சாவ்பால், ஹோய்சோய், ஃபேன்கோட் மற்றும் டைப்ஸ்பிளே உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.

மேலும், ஜியோ டிவி கிடைக்கும். ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile) கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கொடுக்கப்படும். இந்த ஓடிடி ஆப்களுடன் 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம்.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இது டேட்டா வவுச்சர் போல இருக்காது. இதிலேயே வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா சலுகைகள் கிடைக்கும்.

டிவி சேனல்கள் வேண்டாம், ஓடிடி ஆப்கள் மற்றும் வாய்ஸ் கால்களுடன் கிடைக்கும் திட்டம் போதுமானால், ஜியோ ரூ.445 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட்பிளே, டிஸ்கவரிபிளஸ், சன்நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, ஈடிவிவின், சாவ்பால், ஹோய்சோய் மற்றும் பேன்கோட் கிடைக்கிறது.

28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த ஓடிடி ஆப்களுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. ஜியோ ஏஐ கிளவுட் உள்ளிட்ட சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. இந்த திட்டமும் டேட்டா வவுச்சர் போல கிடையாது.

Best Mobiles in India

English summary
Jio Rs 500 Plan Jio Rs 445 Plan Jio Rs 200 Plan 1000 TV Channels OTT Subscriptions Check Data Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X