Home
News

சத்தமின்றி அறிமுகமான ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்?

ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ஏர்டெல் நிறுவனத்தை விட கம்மி விலையில் ஓடிடி சந்தா தரும் திட்டங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது ஜியோ நிறுவனம். அந்த வகையில் தற்போது மலிவு விலையில் எக்கச்சக்க ஓடிடி சந்தா தரும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஜியோ.

அதாவது ஜியோ நிறுவனம் தற்போது ரூ.200 மெகா கன்டென்ட் ஆட்-ஆன் பேக் (Jio Rs 200 Mega Content add-on pack) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சத்தமின்றி அறிமுகமான ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்..

ஜியோ ரூ.200 மெகா கன்டென்ட் ஆட்-ஆன் பேக் (Jio Rs 200 Mega Content Add-on Pack) என்பது ஒரு டேட்டா திட்டம் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்காது. ஆனால் திட்டத்தில் 5ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் +Hollywood, அமேசான் பிரைம், சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi),ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal) போன்ற ஓடிடி நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.200 மெகா கன்டென்ட் ஆட்-ஆன் பேக்.

குறிப்பாக இந்த ஜியோ ரூ.200 மெகா கன்டென்ட் ஆட்-ஆன் பேக் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் இந்த ரூ.200 திட்டம் ஆனது டேட்டா பேக் என்பதால், இதைப் பயன்படுத்த உங்களிடம் பின்னணியில் மற்றொரு செயலில் உள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே வைத்துள்ள ரூ.500 மெகா கன்டென்ட் திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் மெகா கன்டென்ட் திட்டம் (Jio Rs 500 Mega Content Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.

சத்தமின்றி அறிமுகமான ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்..

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.500 மெகா கன்டென்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குறிப்பாக ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal), போன்ற ஓடிடி சந்தா ஜியோ ரூ.500 மெகா கன்டென்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 500 Mega Content Plan and Rs 200 Add-On: Benefits Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X