Jio சிம் இருக்கா? ரூ.500 எடுத்து வைங்க.. 2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 11+ ஓடிடி சந்தா!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பிரீமியம் ஓடிடி (OTT) ஆப்கள் மற்றும் ஏஐ (AI) சலுகைகளுடன் கூடிய ரூ.500 மெகா கன்டென்ட் பிளானை (Mega Content Plan) கொடுத்து வருகிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சலுகைகளையும் இது பேக் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முழு விவரங்கள் இதோ:
திட்டத்தின் முக்கிய நன்மைகள்:
வேலிடிட்டி: 28 நாட்கள்
டேட்டா: தினமும் 2 ஜிபி டேட்டா (மொத்தம் 56 ஜிபி டேட்டா). தினசரி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும்.
அன்லிமிட்டெட் 5ஜி (Unlimited 5G Data): 5ஜி ஸ்மார்ட்போனை வைத்து இருக்கும் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
வாய்ஸ்: எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.
எஸ்எம்எஸ்: தினமும் 100 எஸ்எம்எஸ் இலவச அனுப்பி கொள்ளலாம்.

ஓடிடி (OTT) சந்தா:
இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே இதில் கிடைக்கும் ஓடிடி சந்தாக்கள்தான். ஏனென்றால், ஒட்டுமொத்த பிரீமியம் ஓடிடி ஆப்களையும் இதில் பெற்று கொள்ளலாம். யூடியூப் பிரீமியம் (YouTube Premium) & அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) ஆகிய ஓடிடி ஆப்களை மைஜியோ (MyJio) ஆப் வழியாக ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் (JioHotstar Mobile + Hollywood) சந்தாவையும் கூப்பன் வாயிலாக மைஜியோ ஆப் வழியாக பெற்று கொள்ளலாம். இது மை வின்னிங் (My winning) விருப்பத்தின் கீழ் கிடைக்கும். ஜியோ டிவி மொபைல் ஆப் (JioTV Mobile App) வழியாக ஏகப்பட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதில் சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (Zee5), சன்நெக்ஸ்ட் (SunNXT), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இவற்றை தனித்தனியாக லாகின் செய்ய வேண்டியது கிடையாது.
ஏஐ (AI) மற்றும் கிளவுட் சலுகைகள்:
கூகுள் ஜெமினி ப்ரோ பிளான் (Google Gemini Pro Plan) கிடைக்கும். ரூ.35,100 மதிப்பில் 18 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த சந்தா கிடைக்கும். இதில் 5000 ஜிபி (5 டிபி) கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா (Nano Banana) போன்ற அணுகல்கள் கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) வழியாக 50 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
நிபந்தனைகள்:
ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் வசதிகளை பெற, உங்கள் ஜியோ எண்ணை மட்டுமே பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும். கூகுள் ஜெமினி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் சலுகைகள் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால், ரூ. 349 அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள அன்லிமிட்டெட் 5ஜி திட்டங்களில் ரீசார்ஜ் செய்து ஆக்டிவாக வைக்க இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications