ஜியோ சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? ரூ.500 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. என்னென்ன நன்மைகள்? இதோ விபரம்!
ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது இந்நிறுவனத்தின் ரூ.500 மற்றும் 899 ப்ரீபெய்ட் திட்டங்களில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது மற்றும் எத்தனை நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 500 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிவிஎம், (Amazon PVME), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal), போன்ற ஓடிடி சந்தா ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
அதிக ஓடிடி சந்தா நன்மையை எதிர்பார்க்கும் ஜியோ பயனர்கள் ஜியோ ரூ.500 ப்ரீபேய்ட் திட்டத்தில் தேர்வு செய்வது நல்லது. ஒருவேளை அதிக டேட்டா விரும்பும் பயனர்கள் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது ரூ.899 ப்ரீபெய்ட் திட்த்தில் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் வழங்கப்படும். மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








