Home
News

ஜியோ சிம் வச்சிருக்கீங்களா? கம்மி பட்ஜெட்ல 1000 டிவி சேனல்கள்.. தினசரி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் கம்மி பட்ஜெட்டில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். அதுவும் ஜியோ நிறுவனம் ஓடிடி நன்மைகளுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.500 மற்றும் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக சலுகைகளை வழங்குகின்றன. இங்கே அந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ சிம் வச்சிருக்கீங்களா? கம்மி பட்ஜெட்ல 1000 டிவி சேனல்கள்..

ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 500 Prepaid Plan) ஆனது 1000-க்கும் மேல் லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது. அதுவும் இதில் பிரீமியம் சேனல்களுடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) மற்றும் வார்னர் ப்ரோஸ் (Warner Bros) சேனல்கள் கிடைக்கும்.

மேலும் டிஸ்கவரி (Discovery) மற்றும் ஈடிவி நெட்வொர்க் (ETV Network) போன்ற பல சேனல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ டிவி ஆப் மூலம் இந்த ஒட்டுமொத்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.

யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Video Mobile), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5) இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் ஈடிவி வின் (ETVWin) போன்ற ஓடிடி சந்தா இந்த ஜியோ ரூ.500 திட்டம் மூலம் கிடைக்கும்.

சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), டைம்ஸ் பிளே (Times Play), தாரங் பிளஸ் (Tarang Plus) போன்ற சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா, 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பிரீமியம் அணுகல் இந்த ஜியோ ரூ.500 திட்டம் மூலம் கிடைக்கிறது.

அதேபோல் 12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஜியோ சிம் வச்சிருக்கீங்களா? கம்மி பட்ஜெட்ல 1000 டிவி சேனல்கள்..

ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் கேன்வா ப்ரோ லைட் சந்தா, ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 500 and Rs 749 Prepaid Plans: Check Validity and Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X