Home
News

கேபிள் TV, DTH கதை முடிந்தது.. ஜியோ ரூ.500 மற்றும் 550 திட்டங்கள்.. 1000 லைவ் டிவி சேனல்கள்.. 15 OTT சந்தா..

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ (Jio) நிறுவனம். அதுவும் ஓடிடி சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்கள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் சமீபத்தில் அதிகமாக அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.

குறிப்பாக இதுபோன்ற ஓடிடி சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்கள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் ரூ.500 மற்றும் 550 விலையில் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தா மற்றும் டேட்டா நன்மையை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கேபிள் TV, DTH கதை முடிந்தது.. ஜியோ ரூ.500 மற்றும் 550 திட்டங்கள்..

ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம (Jio Rs 500 Prepaid Plan) ஆனது 1000-க்கும் மேல் லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது. அதுவும் இதில் பிரீமியம் சேனல்களுடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) மற்றும் வார்னர் ப்ரோஸ் (Warner Bros) சேனல்கள் கிடைக்கும்.

இதுதவிர டிஸ்கவரி (Discovery) மற்றும் ஈடிவி நெட்வொர்க் (ETV Network) போன்ற பல சேனல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ டிவி ஆப் மூலம் இந்த ஒட்டுமொத்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.

யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Video Mobile), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5) கொடுக்கப்படுகிறது. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் ஈடிவி வின் (ETVWin) போன்ற ஓடிடி சந்தா இந்த ஜியோ ரூ.500 திட்டம் மூலம் கிடைக்கும்.

சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), டைம்ஸ் பிளே (Times Play), தாரங் பிளஸ் (Tarang Plus) போன்ற சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா, 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பிரீமியம் அணுகல் இந்த ஜியோ ரூ.500 திட்டம் மூலம் கிடைக்கிறது.

அதேபோல் ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

ஜியோ ரூ.550 திட்டம் (Jio Rs 550 Plan): இது டேட்டா பேக் திட்டம் ஆகும். ஆகவே, உங்களிடம் பேஸ் திட்டம் இருக்க வேண்டும். அதுவும் 90ஜிபி டேட்டாவை கொடுக்கிறது இந்த திட்டம். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது. மேலும் இந்த டேட்டாவுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல இந்த திட்டத்தில் லைவ் டிவி மற்றும் ஓடிடி ஆப்களுக்கும் கிடைக்கும்.

ஜியோவின் ரூ.550 திட்டம் ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.

கேபிள் TV, DTH கதை முடிந்தது.. ஜியோ ரூ.500 மற்றும் 550 திட்டங்கள்..

ஜியோ டிவியில் இந்த ஒட்டுமொத்த லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ லைட், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.550 ப்ரீபெய்ட் திட்டம்.

எனவே ஜியோ ரூ.550 திட்டம் லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களையும் 84 நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. மேலே கூறியபடி ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 500 And Rs 550 Plans: 1000 Live TV Channels, OTT and More Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X