மொத்த சலுகையும் ஒரே திட்டத்துல இறக்கிய அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா.. ஜியோகேம்ஸ் கிளவுட்!
ஜியோ (Jio) நிறுவனமானது, கேமிங் பிரியர்களுக்கான கிளவுட் கேம் சலுகை மட்டும்மல்லால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் கூடுதல் டேட்டா (Extra Data) போன்று வழக்கமாக கிடைக்கும் சலுகைகளையும் ஒரே திட்டத்தில் கொடுக்கிறது. இதுபோக ஓடிடி சந்தா (OTT Subscription), பிஜிஎம்ஐ ஸ்கின் கூப்பன் (BGMI Skin Coupon) போன்ற சலுகைகளையும் கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேமிங் பிரியர்களுக்கு பிரத்யேக திட்டங்களை ஜியோ வைத்துள்ளது. இதில் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுடன் 2 திட்டங்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்த கேமிங் திட்டங்களில் ஜியோ ரூ.495 திட்டத்தில் ஏகப்பட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டும் கிடைக்காது. மற்றபடி கூடுதல் டேட்டா உள்பட பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.

ஜியோ ரூ 495 திட்ட விவரங்கள் (Jio Rs 495 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) மற்றும் பேன்கோட் (FanCode) ஆகியவற்றி சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 28 நாட்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் 500+ பிரீமியம் கேம்கள் (Premium Games) எச்டி ரெசொலூஷனில் கிடைக்கிறது.
இந்த கேம்களை மொபைல் மட்டுமல்லாமல், பிசி, லேப்டாப் மற்றும் ஜியோ செட்-டாப் பாக்ஸ் (Jio Set-top Box) ஆகியவற்றின் மூலம் விளையாடலாம். ஆகவே, ஜியோ ஃபைபர் (Jio Fiber) சேவைகளில் கொடுக்கப்படும் ஆண்ட்ராய்டு பாக்ஸ் (Android Box) மூலம் டிவியில் கேம்களை விளையாடி கொள்ளலாம். இதுவொரு கிளவுட் கேமிங் சந்தாவாக இருப்பதால், டேட்டா மட்டுமே போதுமானதாகும்.
ஆகவே, பிரீமியம் கேம்களை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டியது கிடையாது. ஆன்லைனிலேயே விளையாடி கொள்ளலாம். இதுபோக பிஜிஎம்ஐ பிரியர்களுக்கு இலவமாக ஸ்கின் கூப்பன் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இதில் என்னென்ன கிடைக்கிறது?
28 நாட்களுக்கு கேமிங் சந்தா கிடைப்பதை போலவே அதே நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், கூடுதலாக 5 ஜிபி டேட்டாவை இந்த கேமிங் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். ஆகவே, 47 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இந்த 1.5 ஜிபிக்கு வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய சலுகைகள் கிடைக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், கூடவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால், ரூ.545 விலை கொண்ட திட்டத்துக்கு செல்லலாம்.
ஜியோ ரூ 545 திட்ட விவரங்கள் (Jio Rs 545 Plan Details): இந்த திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தில் கிடைத்த கேமிங் சலுகைகள், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் 28 நாட்களுக்கு கிடைக்கும். டேட்டாவில் மட்டும் நாளொன்றுக்கு 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் 5ஜி சலுகை கிடைக்கிறது. அதேபோல பேன்கோட் மட்டுமல்லாமல், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) வருகிறது.


Click it and Unblock the Notifications








