ஒரே Jio ரீசார்ஜ்.. இனி 1.5 ஜிபி டேட்டா.. கூட 5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. Jio Games சந்தா!
ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plan) கேமிங் பிரியர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் திட்டங்கள் கூடுதல் வரவேற்பு பெறுகின்றன. ஏனென்றால், ஓரிரு திட்டங்களில் கேமிங் சலுகைகள் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதில் ஜியோ ரூ.495 திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 495 திட்ட விவரங்கள் (Jio Rs 495 Plan Details): 28 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த நாட்களில் வழக்கம்போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். மேலும், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இதுபோக கூடுதலாக 5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

மொத்தமாக 47 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகள் போக 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை பெற்று கொள்ளலாம். ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைப்பதை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்துள்ளது. அதேபோல ஜியோ டிவி (Jio TV) சலுகை கிடைக்கிறது.
மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் கூடுதல் சலுகைகளை போலத்தான். ஏனென்றால், இது கேமிங் பிரியர்களுக்கான திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, அந்த சலுகைகளை பார்க்கையில், 28 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) சலுகை கிடைக்கிறது. ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான பேன்கோட் (FanCode) சந்தா கிடைக்கிறது.
இந்த கிளவுட் கேமிங் சலுகையில் 500+ ஹை டெபனிஷன் ப்ரீமியம் கேம்களை (High Definition Premium Games) அணுக முடியும். ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், பிசி (PC) லேப்டாப் (Laptop) ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். மேலும், ஜியோ செட்-டாப் பாக்ஸ் (Jio Set-top Box) வழியாக டிவியிலும் அணுக முடியும். இந்த கேம்களை டவுன்லோட் செய்ய வேண்டியது கிடையாது.
அதேபோல கன்சோல் தேவை கிடையாது. கன்ட்ரோலர் மட்டுமே இருந்தால் போதும், விளையாக முடியும். மேலும், பிஜிஎம்ஐ ஸ்கின் கூப்பன் (BGMI Skin Coupon) மற்றும் போகிமோன் யுனைடெட் (Pokemon UNITE) சலுகையும் இந்த கேமிங் திட்டத்தில் கிடைக்கிறது. இதே சலுகைகள் டேட்டா திட்டத்தில் வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது.
இது மலிவான விலைக்கு கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள், தினரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கொடுக்கப்படாது. இருப்பினும், லம்ப்-சம் டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா சலுகையை கொடுக்கும். ஏற்கனவே, இருக்கும் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டத்துடன் இதை ரீசார்ஜ் செய்து கொள்ளளாம். இதன் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ 298 திட்ட விவரங்கள் (Jio Rs 298 Plan Details): இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் ஜியோகேம்ஸ் கிளவுட் கிடைக்கும். இதிலும் 500+ ஹை டெபனிஷன் ப்ரீமியம் கேம்கள் கிடைக்கும். 3 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த சலுகைகளை தவிர மற்ற சலுகைகள் கிடைக்காது.
ஆகவே, ஓடிடி, ஜியோ டிவி, ஜியோ ஏஐ கிளவுட் உள்ளிட்ட சலுகைகளை இதில் பயன்படுத்த முடியாது. ஜியோகேம்ஸ் கிளவுட் மட்டுமே கிடைக்கும். இதையும் ஸ்மார்ட்போன், லோப்டாப், பிசி மற்றும் டிவிகளில் விளையாடி கொள்ள முடியும். கிளவுட் கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக திட்டங்களாக இவை இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








