அம்பானி தாராளம்.. ரூ.49 மட்டுமே கொடுங்க.. அன்லிமிடெட் டேட்டாவை பெருங்க.. எவ்வளவு வேணுனாலும் யூஸ் பண்ணிக்கோங்க
ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எப்படி தான் இப்படிப்பட்ட ரீசார்ஜ் திட்டங்கள் எல்லாம் கிடைக்கிறதோ தெரியலை என்று பொறாமைப்படும் அளவிற்கு, முகேஷ் அம்பானி (Mukesh Ambani) ஜியோ வாடிக்கையாளர்களுக்கு (Jio customers) தொடர்ந்து பல வித்தியாசமான திட்டங்களை வழங்கி வருகிறார். இந்த வரிசையில், இப்போது வெறும் 49 ரூபாய் செலவில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited data) கிடைக்கும் ஒரு சூப்பர் திட்டத்தை அம்பானி இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறார். இதை பற்றி விபரமாக பார்க்கலாம்.
தாராளமான மனசிற்கு சொந்தக்காரர் என்று ஜியோ வடிக்கையாளர்களால் (Jio users) பாராட்டப்படும் முகேஷ் அம்பானி, தனது ஜியோ பயனர்களை குஷி அடைய செய்யும் வகையில், வெறும் 49 ரூபாய்க்கு ஒரு புதிய ஜியோ திட்டத்தை (Jio Rs 49 Plan) அறிமுகம் செய்திருக்கிறார். ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு (Jio Prepaid Recharge Users) இந்த திட்டம் ஒரு சிறப்பு திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ரூ. 49 திட்டம் (Jio Rs 49 Plan):
ஜியோ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஜியோ ரூ. 49 திட்டம் (Jio Rs 49 Plan), ஜியோவின் கிரிக்கெட் பிளான் (Jio Cricket Plan) என்ற சிறப்பு பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் (Cricket) பிரியர்களின் தேவைக்காக இந்த திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக கூறியுள்ளது. இந்த பிரிவின் கீழ் ஜியோ நிறுவனம் மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஜியோ ரூ. 49 திட்டம் உட்பட, ஜியோ ரூ. 222 திட்டம் (Jio Rs 222 Plan) மற்றும் ஜியோ ரூ. 749 திட்டம் (Jio Rs 749 Plan) ஆகிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மிகவும் குறைந்த விலையில் அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்கும் திட்டமாக ஜியோ ரூ.49 திட்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜியோ வழங்கும் இந்த ரூ. 49 திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது.
இந்த ஜியோ ரூ.49 பிளான் உங்களுக்கு 25GB ஹை-ஸ்பீட் டேட்டாவை (high speed data) வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) 1 நாள் ஆகும். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 25GB ஹை ஸ்பீட் டேட்டாவிற்கு பயன்பாட்டு வரம்பு என்று எதுவும் கிடையாது. இந்த வரம்பில்லா 25ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்தி முடித்த பிறகு, 64Kbps என்ற வேகத்தில் அளவே இல்லாத அன்லிமிடெட் டேட்டா பயன்பாடு பயன்படுத்த கிடைக்கிறது.
அம்பானி தாராளம்.. 25GB ஹை ஸ்பீட் டேட்டாவுக்கு பிறகும் அன்லிமிடெட் டேட்டா நன்மை:
இந்த திட்டத்துடன் கிடைக்கும் 25GB டேட்டாவை வைத்து, 8 முதல் 12 எச்டி திரைப்படங்களை (HD Movies) நீங்கள் டவுன்லோட் (download) செய்து மகிழலாம். அல்லது இடைவெளி இல்லாமல் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை ஆன்லைனில் கண்டு மகிழலாம். வெறும் 49 ரூபாய் விலையில் ஜியோ அன்லிமிடெட் டேட்டாவை வழங்கி அசத்தியுள்ளது. இந்த திட்டம் டேட்டா ஒன்லி திட்டமாக (data only pack plan) செயல்படுகிறது.
இதில் வாய்ஸ் கால்ஸ் (voice calls), எஸ்எம்எஸ் (SMS) நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு விருப்பமான நேரத்தில் அல்லது அதிகடேட்டா தேவைப்படும் நேரங்களில் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து 1 நாள் வேலிடிட்டி உடன், ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்துடன் பயன்பெறலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது. உங்கள் வழக்கமான தினசரி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தின் டேட்டா தீர்ந்த பிறகு கூட இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








