Home
News

49 ரூபாய்க்கு அள்ளித்தரும் அம்பானி.. Jio பயனர் காட்டில் Unlimited டேட்டா மழை.. எத்தனை நாட்களுக்கனு பாருங்க..

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்திய டெலிகாம் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ஜியோ ரூ. 49 திட்டம் (Jio Rs. 49 Plan) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மலிவு விலையில் அன்லிமிடெட் டேட்டா நன்மையை (unlimited data) வழங்குகிறது. இந்த திட்டம் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும்? யாருக்கெல்லம் இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்? என்பது போன்ற தகவலை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த ஜியோ 49 பிளான் (Jio 49 Plan), தினசரி டேட்டாக் கோட்டாவை (daily data quota) அடிக்கடி தாண்டி, தற்காலிகமாக கூடுதல் டேட்டா தேவைப்படுபவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய செலவு குறைந்த திட்டங்களை வழங்குவதன் மூலம், ஜியோ ஹெவி டேட்டா பயனாளர்களின் (heavy data users) தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், மீண்டும் குறைந்த விலையில் மக்களை கவரும் நம்பிக்கையை பெற்றுள்ளது.

49 ரூபாய்க்கு அள்ளித்தரும் அம்பானி.. Jio பயனர் காட்டில் டேட்டா மழை..

49 ரூபாய்க்கு அள்ளித்தரும் அம்பானி.. Jio பயனர் காட்டில் Unlimited டேட்டா மழை:

இந்த புதுமையான அணுகுமுறை நுகர்வோருக்கு மட்டுமல்ல, தொலைத்தொடர்பு துறையில் (telecommunications sector) ஜியோவை தொடர்ந்து முன்னணியில் வைக்க உதவுமென்று Jio நம்புகிறது. ஜூலை 2024 இல், பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை நிறுவனம் அதிகரித்த போதிலும், சில மலிவான விருப்பங்களை நிறுத்திய பிறகும், ரிலையன்ஸ் ஜியோ, அதன் பெரிய வாடிக்கையாளர் தளத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனுமதிக்கும் புதிய மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்தத் திட்டங்களில் ஜியோ ரூ. 49 திட்டம் தனித்து நிற்கிறது. இது டேட்டா பயனாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது. ஜியோவின் டேட்டா பேக்குகள் (Jio data packs) வகைக்குள் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எந்தவிதமான வாய்ஸ் கால்ஸ் (voice calls) நம்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை வழங்காது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டம் தனிப்பட்ட முறையில் அன்லிமிடெட் டேட்டாவை (Only data benefit) மட்டும் வழங்குகிறது.

ஜியோ ரூ. 49 திட்டம் (Jio Rs. 49 Plan):

இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி 1 நாள் (1 day validity) ஆகும். என்ன தான் ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை அன்லிமிடெட் டேட்டா திட்டம் என்று குறிப்பிட்டிருந்தாலும், இந்த திட்டத்தின் முழுமையான நன்மைகளை பற்றி அறிந்துகொள்ள ஆராய்ந்த பொழுது, இந்த திட்டத்தில் ஜியோ நிறுவனம் குறிப்பிடத்தக்க வரம்பை வைத்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நன்மை அன்லிமிடெட் நன்மையாக (Jio unlimited benefits) கருதப்படுகிறது.

ஜியோ ரூ.49 பிளான் உண்மையில் 1 நாள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது என்று தான் ஜியோ (Jio) நிறுவனம் விளமப்ரம் செய்துள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தின் முழுமையான பலன் பற்றி அறிந்துகொள்ள முயன்றால், இந்த திட்டம் உங்களுக்கு 25GB ஹை-ஸ்பீட் டேட்டாவை (high speed data) வழங்குகிறது என்று Jio குறிப்பிட்டுள்ளது. இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) 1 நாள் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

அன்லிமிடெட் டேட்டா தான் ஆனால் 25GB ஹை-ஸ்பீட் டேட்டா கட்டுப்பாடு:

அதேபோல், இந்த திட்டத்துடன் உங்களுக்கு வழங்கப்படும் 25GB ஹை ஸ்பீட் டேட்டா முடிந்த பிறகு, இணைய வேகம் (data speed) 64Kbps ஆக குறைக்கப்படும் என்பதையும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வரம்பில்லா 25ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்தி முடித்த பிறகு தான் இணைய வேகம் குறைந்து, அதற்கு பின் அன்லிமிடெட் டேட்டா நன்மை தொடர்ந்து பயன்படுத்த கிடைக்குமென்று நிறுவனத்தின் வலைப்பக்க தகவல் தெரிவிக்கிறது. எப்படி பார்த்தாலும், 49 ரூபாய்க்கு 25GB டேட்டா நல்ல டீல் தானே மக்களே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 49 Plan Offers Unlimited Data Benefit For 1 Day Validity Jio Customers Check Data Pack Detail
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X