Home
News

மொபைல், லேப்டாப், செட்-டாப் பாக்ஸ் எல்லாத்துலயும்.. இதுக்காகவே ரூ.48 Jio பிளானை ரீசார்ஜ் பண்ணுவாங்களே!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சேவையின் கீழ் ரூ.50 க்கும் குறைவான விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன: ரூ.19, ரூ.29, ரூ.39 ரூ.49 என அடுக்கிக்கொண்டே போகலாம். உங்களிலும் பலருக்கும் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம், இந்த 4 திட்டங்களும் டேட்டா-ஒன்லி பேக்குகள் என்று!

இந்த 4 திட்டங்களுக்கு இடையே, ரூ.50 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இன்னொரு ஜியோ திட்டமும் உள்ளது. அது ரூ.48 கேமிங் ஆட்-ஆன் பிளான் ஆகும். ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வேல்யூ ஆடட் சேவைகளை வழங்குவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் கேமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தது. அந்த தொகுப்பில் மிகவும் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு ட்ரையல் பேக் தான் - ரூ.48 ரீசார்ஜ்!

இதுக்காகவே ரூ.48 Jio பிளானை ரீசார்ஜ் பண்ணுவாங்களே!

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வெறும் ரூ.48 க்கு, பயனர்களுக்காக தொகுக்கப்பட்ட ஒரு பிரத்யேக கேமிங் தளத்தையே ஜியோ கொண்டுள்ளது. அந்த தளம் - ஜியோ கேம்ஸ் கிளவுட் ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது பயனர்களை கிளவுட் கேமிங் செய்ய அனுமதிக்கிறது. ஜியோ கேம்ஸ் கிளவுட் தளத்திற்கு பிரத்யேக சந்தா திட்டங்களும் உள்ளன. அதற்கு கட்டணம் செலுத்துவதற்கு முன் ரூ.48-ன் கீழ் என்னென்ன கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.48 கேமிங் ஆட்-ஒன ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ரூ.48 வவுச்சர் ஆனது ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை (மெயின் ரீசார்ஜை) கொண்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ரூ.48 திட்டமானது 3 நாட்கள் செல்லுபடியாகும். இதன்கீழ் பயனர்கள் 3 நாட்களுக்கு ஜியோ கேம்ஸ் கிளவுட் சந்தாவையும் 500 க்கும் மேற்பட்ட எச்டி பிரீமியம் கேம்களையும் அணுகலாம்

இந்த தளத்தை பயன்படுத்தி பயனர்கள் தங்கள் பெர்சனல் கம்பியூட்டர், லேப்டாப்கள், மொபைல்கள் மற்றும் ஜியோ செட்-டாப் பாக்ஸ் ஆகியவற்றில் கேம்களை விளையாடலாம். இந்த திட்டத்தின் இன்னொரு சிறந்த விஷயம் என்னவென்றால், அனைத்து கேமிங் நிகழ்வுகளுமே கிளவுட்டில் நடைபெறுவதுதான். எனவே, கன்சோல் இல்லாமலேயே உங்களால் உயர் தரத்தில் கேமிங் செய்ய முடியும்

இதன்கீழ் கிடைக்கும் மல்டி டிவைஸ் அம்சம் ஆனது பயனர்கள் ஒரு டிவைஸ் இல் விளையாடவும், பின்னர் மற்றொரு டிவைஸ் இல் அதை தொடரவும் அனுமதிக்கிறது. இந்தியாவில், குறிப்பாக ஆன்லைன் ஸ்ட்ரீமர்கள் மத்தியில், "கிளவுட் கேமிங்" பிரபலமடைந்து வரும் வேளையில் ரூ.48 திட்டமானது உண்மையிலேயே அதிகம் செலவு செய்யாமல் "அதை" முயற்சி செய்ய அனுமதிப்பது - வரவேற்கத்தக்க விஷயம்!

இதே ஜியோ கேமிங் பிளான்கள் பிரிவின் கீழ் ரூ.98, ரூ.298, ரூ.495. ரூ.545 ஆகிய திட்டங்களும் உள்ளன. இவைகள் ரூ.48 உடன் ஒப்பிடும் போது, கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன. உதாரணத்திற்கு ரூ.98 அந்த 1 வாரம் அல்லது 7 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் ஜியோ கேம்ஸ் கிளவுட் சந்தா வழங்குகிறது

அடுத்ததாக உள்ள ரூ.298 ஆனது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் சேர்த்து 3ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. இதேபோல ரூ.495 திட்டம் ஆனது அதே 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால் இது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் கூடுதலாக 5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் பிஜிஎம்ஐ (BGMI), ஃபேன்கோட் (FanCode) சந்தாக்களையும் வழங்குகிறது.

கடைசியாக உள்ள ரூ.545 மதிப்புள்ள ஜியோ கேமிங் திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி கீழ் ஜியோ கேம்ஸ் கிளவுட் சந்தா வழங்குகிறது. மேலும் டெய்லி 2 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் கூடுதலாக 5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. கூடவே ரூ.495-ஐ போலவே பிஜிஎம்ஐ (BGMI), ஃபேன்கோட் (FanCode) சந்தாக்களையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 48 Gaming Plan Allow Users to Play HD Cloud Games on Mobile Laptop Jio STB For 3 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X