Home
News

மினிமம் ரீசார்ஜ்.. இனி மூனு மாசத்துக்கு இவ்ளோதான்.. மாதம் ரூ.159-க்கு 84 நாட்கள் வேலிடிட்டி.. Jio-வுக்கு குஷி!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சிம் கார்டை மூன்று மாதங்களுக்கு ஆக்டிவாக வைத்திருக்க, இனிமேல் மினிமம் இவ்வளவு ரீசார்ஜ் செய்யதால் போதுமானதாக இருக்கும். இந்த புதிய திட்டம் மூலம் மாதத்துக்கு வெறும் ரூ 159 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஜியோ ஆப்களின் சலுகையும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ஜியோ ரூ 479 திட்ட விவரங்கள் (Jio Rs 479 Plan Details): ஜியோ மட்டுமல்லாமல், மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிட்டாலும், இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மட்டுமே மிகவும் மலிவான விலைக்கு 3 மாத வேலிடிட்டியை கொடுக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 6 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இது லம்ப்-சம் டேட்டா சலுகையாகும்.

மினிமம் ரீசார்ஜ்.. மூனு மாசத்துக்கு இவ்ளோதான்.. மாதம் ரூ.159-க்கு!

ஆகவே, தினசரிக்கு எந்தவொரு லிமிட்டும் கிடையாது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஆகவே, கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 1000 எஸ்எம்எஸ் சலுகை மொத்தமாக கொடுக்கப்படுகிறது. லிமிட் இல்லாமல், தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள முடியும். டேட்டா சலுகை மட்டும் குறைவாக கிடைப்பதால், 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இதுவே தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் 84 நாட்களுக்கு வேலிடிட்டி எதிர்பார்த்தால், ரூ.799 தேவைப்படுகிறது.

இதுபோக ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) மற்றும் ஜியோசினிமா (JioCinema) ஆகிய ஆப்களையும் பயன்படுத்தி இதில் கொள்ள முடியும். ஜியோசினிமாவில் பிரீமியம் சலுகையை மட்டும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, இந்த மலிவு விலை திட்டம் மிகவும் லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது. வாய்ஸ் கால்கள் சலுகைகள் 3 மாதங்களுக்கு மலிவான விலையில் வேண்டும்.

அதே நேரத்தில் டேட்டா தேவைப்படும் போது, மலிவான விலைக்கு 4ஜி டேட்டா வவுச்சரும் கிடைக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்காவான தேர்வாக இருக்கும். ஏனென்றால், ரூ.19 முதல் ஜியோவில் டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. அதுவும் 4ஜி வேகத்தில் கிடைக்கிறது. ஆகவே, இது புத்திசாலித்தனமான கஸ்டமர்களுக்கு ஏற்ற திட்டமாகும்.

இந்த திட்டத்தை ஜியோ ஆப் (Jio App) அல்லது ஜியோ வெப்சைட் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வேல்யூ திட்டங்களின் (Value Plans) கீழ் இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஒருவேளை தினசரி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், ரூ.799 ஆரம்ப விலையில் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ 799 திட்ட விவரங்கள் (Jio Rs 799 Plan Details): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் தினசரிக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். ஆகவே, மொத்தமாக 126 ஜிபி டேட்டாவையும், 1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை சலுகை கிடைக்கிறது. ஆனால், இதில் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமா ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 479 Plan With Unlimited Voice Calls 6GB Data 84 Days Validity Check Minimum Three Month Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X