Jio-க்கு இனிமே குஷி.. மாதாந்திரம் ரூ.159 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அடிமட்ட ரேட்ல அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ (Jio) கஸ்டமர்கள் குஷியாகும்படி அடிமட்ட விலையிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 6 ஜிபி டேட்டா (6GB Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், இனி வேறு எந்த நிறுவனத்தின் திட்டமும் இதற்கு நிகராக இருக்க முடியாது. இந்த மலிவு விலை மூன்று மாத திட்டத்தின் (Cheapest 3 Month Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ நிறுவனத்தின் திட்டங்களின் விலை அதிகரித்தாலும், வேல்யூ திட்டங்களானது மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கே கிடைக்கிறது. இதில் மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் வேல்யூ திட்டத்தை ஜியோ மட்டுமே வைத்திருக்கிறது. இந்த திட்டத்துக்கான மாத செலவு வெறும் ரூ.159ஆக இருப்பதால், கஸ்டமர்களிடையே ரீசார்ஜ் பின்னியெடுக்கிறது.

ஜியோ ரூ 497 திட்ட விவரங்கள் (Jio Rs 479 Plan Details): ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்கள் வழங்காத விலைக்கு இந்த ப்ரீபெய்ட திட்டம் கிடைக்கிறது. இந்த 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் (STD Voice Calls) கிடைக்கிறது.
இதுபோக ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) கிடைக்கிறது. டேட்டா சலுகை மட்டும் குறைவாக கிடைக்கும். ஆனால், போஸ்ட் டேட்டா சலுகையை இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடியும். அதாவது, மிகவும் மலிவான விலைக்கு கிடைப்பதால், 84 நாட்களுக்கும் 6 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது. இருப்பினும், 6 ஜிபிக்கு பிறகும் டேட்டா கிடைக்கும்.
ஆனால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கிடைக்கும். ஆகவே, வாய்ஸ் கால்களுக்கான திட்டமாக இந்த வேல்யூ திட்டத்தை பார்க்கலாம். மேலும், எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு கிடைக்காமல் மொத்தமாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 1000 எஸ்எம்எஸ்களை 3 மாதங்களுக்கும் தேவைக்கு ஏற்ப இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) சலுகைகளும் கிடைக்கிறது. ஆகவே, ஜியோ கஸ்டமர்கள் மலிவான விலையில் 3 மாதங்களுக்கு தங்களது சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டுமானால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதைவிட மலிவான விலையில் 3 மாத திட்டம் எங்கும் கிடையாது.
இதேபோல வாய்ஸ் கால்கள் சலுகை மட்டும் அதிகமாக கிடைக்கும் மாதாந்திர திட்டம் வேண்டுமானால், ரூ.189 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் சரியாக இருக்கும். இந்த திட்டத்திலும் வாய்ஸ் கால்கள் அதிகமாகவும், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் தேவைக்கு ஏற்பவும் பேக் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் விவரங்களை சுருக்கமாக பார்த்து விடுவோம்.
இந்த ஜியோ ரூ.189 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை கஸ்டமர்களால் செய்து கொள்ள முடியும். ரோமிங் கால்களும் இந்த திட்டத்தில் அடங்கும். அதேபோல டேட்டா சலுகையும் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது.
ஆகவே, 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை இந்த மாதாந்திர திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். முதலாவது திட்டத்தில் மாத செலவு ரூ.159ஆக இருக்கிறது. ஏனென்றால், அதை மூன்று மாதத்துக்கு ரீசார்ஜ் செய்கிறோம். ஆனால், 28 நாட்களுக்கு செய்தால், ரூ.189ஆக விலை அதிகரிக்கிறது.


Click it and Unblock the Notifications