Home
News

YOUTH-க்கு குறி.. வீட்டுக்கு வீடு 28 நாட்கள் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா.. OTT சந்தா!

ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனம், யூத்களை தட்டித் தூக்கும்படி பிரத்யேக ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. கேமிங், ஓடிடி, டேட்டா போன்ற மொத்த சலுகைகளையும் ஒரே திட்டத்தில் களமிறக்கி, அதற்கு மலிவான விலையையும் நிர்ணயம் செய்துள்ளது. இந்த கேமிங் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.459 யூத் திட்ட விவரங்கள் (Jio Rs 459 Youth Plan Details): இந்த யூத் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 5 ஜிபி கூடுதல் டேட்டாவையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது.

YOUTH-க்கு குறி.. வீட்டுக்கு வீடு 28 நாட்கள் ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்!

இப்படி டேட்டா சலுகையில் கஸ்டமர்களை தட்டித் தூக்கி இருக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. இந்த வழக்கமாக கிடைக்கும் சலுகைகள் போல தோன்றலாம். ஆனால், இனிமேல்தான் சலுகைகளே ஆரம்பிக்கிறது.

இந்த யூத் திட்டத்தில் ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஸ்னாப்சாட்பிளஸ் (Snapchat+) மற்றும் ஃபேன்கோட் (Fancode) சந்தா கிடைக்கிறது. மைஜியோ ஆப் வழியாக ஸ்னாப்சாட்பிள் சந்தாவை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். அதேபோல ஃபேன்கோட் சந்தாவை ஜியோடிவி (JioTV) ஆப் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த கேமிங் சலுகைகளுக்கு அடுத்து ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். ஆகவே, இந்த திட்டத்தில் கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன், அடுத்த திட்டத்தை 48 மணி நேரத்துக்குள் ரீசார்ஜ் செய்து, தொடர்ந்து ஓடிடி சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

ரூ.349 விலை அல்லது அதற்கு மேல் விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்து கஸ்டமர்களுக்கு மட்டுமே தொடர்ந்து கிடைக்கும். 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கும்படி ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சந்தா இலவசமாக கிடைக்கிறது. இதில் ஜியோஹாட்ஸ்டார், ஜியோஏஐகிளவுட், ஜியோகேம்ஸ் ஆகிய ஆப்களை ஜியோ மொபைல் நம்பர் வழியாக மட்டுமே லாகின் செய்ய முடியும்.

இந்த சலுகைகளுக்கு அடுத்து ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை இந்த யூத் திட்டம் கொடுத்துள்ளது. இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சந்தாவையும் 28 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்த ரூ.349 விலை அல்லது அதற்கு மேல் விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வளவு சலுகைகளையும் ரூ.459 விலைக்கு ஜியோ நிறுவனம் கொடுக்கிறது.

இந்த திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டி வேண்டுமானால், ரூ.9 விலை குறைவாக இருக்கும் ஜியோ ரூ.450 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 36 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இது முந்தைய திட்டத்தைவிட 8 நாட்கள் அதிக வேலிடிட்டியாக இருக்கிறது. இருப்பினும், இதில் கேமிங் சலுகைகள் கிடைக்காது. மற்ற சலுகைகள் போதுமானதாக இருக்கும்.

ஜியோ ரூ.450 திட்ட விவரங்கள் (Jio Rs 450 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 36 நாட்கள் வேலிடிட்டி மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். ஜியோஏஐகிளவுட் சலுகையில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். ஜெமினி ப்ரோ திட்டமானது 18 மாதங்களுக்கு கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கேமிங் சலுகைகளுக்கு முதலில் பார்த்த திட்டத்தை பெறலாம். கூடுதல் வேலிடிட்டிக்கு இந்த திட்டத்தை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 459 Youth Plan With 28 Days Validity 61GB Data Unlimited Voice Calls Check Gaming Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X