செம்ம போடு.. வெறும் ரூ.111 க்கு புது ரீசார்ஜ்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. 5 ஜிபி டேட்டா.. புது Jio பிளான்கள்!
ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு ஸ்னாப்சாட்+ (Snapchat+) சந்தாவுடன் புதிய திட்டங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கின்றன. இதில் 2ஆவதாக கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் ஸ்னாப்சாட்+ மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
ஜியோ ரூ.111 திட்ட விவரங்கள் (Jio Rs.111 Plan Details): இந்த திட்டத்தை டேட்டா பேக்குகளின் (Data Packs) கீழ் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆகவே, ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். இதை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் 5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

மற்ற சலுகைகள் ஆப்ஷன் முறையில் கொடுக்கப்படும். அதாவது, 2 ஆப்களில் சலுகைகள் கிடைக்கும். இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். முதலாவது ஆப்ஷனில் ஜியோகேம் மொபைல் (JioGame Mobile) கிடைக்கும். இதை 56 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது கேமிங் பேக்காக (Gaming Pack) இருக்கிறது.
இரண்டாவது ஆப்ஷன் யூத் பேக் (Youth Pack) ஆக இருக்கிறது. இதிலும் ஜியோகேம் மொபைல் கிடைக்கும். ஆனால், 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால், கூடுதலாக ஃபேன்கோட் (Fancode) ஓடிடி மற்றும் ஸ்னாப்சாட் (Snapchat) கொடுக்கப்படும். இதில் ஸ்னாப்சாட்டை மைஜியோ ஆப் (MyJio App) வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
ஜியோ ரூ.459 திட்ட விவரங்கள் (Jio Rs.459 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கும். ஆகவே, இதை பெறும் கஸ்டமர்களுக்கு ஜியோகேம்ஸ் மொபைல், ஃபேன்கோட் மற்றும் ஸ்னாப்சாட்+ சந்தா கிடைக்கும். மேலும், ஜியோடிவி (JioTV) கிடைக்கும்.
இதுபோக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கிடைக்கும். இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை 18 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம். 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா கிடைக்கும்.
இந்த சலுகைகள் போக வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தமாக 56 ஜிபி டேட்டா கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
மேலும், 5 ஜிபி டேட்டாவை லம்ப்-சம் முறையில் பெற்று கொள்ளலாம். ஆகவே, மொத்தமாக 61 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டங்களில் ஸ்னாப்சாட்+ சந்தா கிடைக்கிறது.
ஆனால், மைஜியோ ஆப் வழியாக மட்டுமே இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஜியோகேம் சலுகையை ஜியோகேம்ஸ் ஆப் வழியாக பெற்று கொள்ளலாம். ஃபேன்கோட் ஆப்பை ஜியோடிவி ஆப் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பிரத்யேக ஆப் வழியாகவே பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications