கொடுத்தாரு பாரு அம்பானி.. இனி 36 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி, 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்து சலித்து விட்டால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 36 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.
அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜெமினி சந்தா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா ஆகியவை இந்த திட்டத்துக்கு கூடுதல் சலுகைகளாக கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி லிமிட்டில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs.450 Prepaid Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 36 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 1 மாதத்துக்கு மேல் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். இதில் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கும்.
இது 5ஜி ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். 4ஜி சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 36 நாட்களில் மொத்தமாக 72 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்க முடியும். 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கும்.
ஆகவே, டேட்டா மற்றும் வேலிடிட்டி கூடுதலாக கிடைப்பதால், டேட்டா வவுச்சர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் இந்த ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கமான சலுகைகள் போக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை இந்த ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால், இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 36 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த மாதாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
48 மணி நேரத்துக்குள் ரீசார்ஜ் செய்தால், ஜியோஹாட்ஸ்டார் சந்தா தொடர்ந்து கிடைக்கும். இந்த சந்தா போக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். ஆனால், இதை ஜியோ மொபைல் நம்பரை (Jio Mobile Number) வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஜியோ கிளவுட் ஆப் வழியாக மொபைல் நம்பரை லாகின் செய்து பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் போக ஜெமினி ப்ரோ சந்தாவையும் இந்த ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்களால் பயன்படுத்த முடியும். இதில் நானோ பனானா கிடைக்கிறது. 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.
இவ்வளவு சலுகைகளையும் ரூ.450 விலைக்குள் கொடுத்து இருக்கிறது. டேட்டா, ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், கூடுதல் வேலிடிட்டியும் வேண்டுமானால், இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஜெமினி ப்ரோ சந்தாவின் மதிப்பு ரூ.35100ஆக இருக்கிறது. ஆனால், இந்த ஜியோ ரூ.450 திட்டத்தில் முற்றிலும் இலவமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications