கப் சிப்னு ரீசார்ஜ்.. இனிமே 30 இல்ல.. 36 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 72 ஜிபி டேட்டா!
ஜியோ கஸ்டமர்களுக்கு 28 நாட்கள், 30 நாட்கள் அல்லது காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டிக்கு பிறகு 56 நாட்கள், 84 நாட்களுக்கு வேலிடிட்டி செல்கிறது. ஆனால், புதிதாக 36 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் களமிறக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக்கு சலுகைகளிலும் பட்டையை கிளப்புவதால், சத்தமே இல்லாமல் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.
ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, இருக்கும் ரூ.445 திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டியை கொடுத்துள்ளது. ஆனால், ஓடிடி சந்தா பெரிதாக இல்லை. இருப்பினும், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. டேட்டாவில் குறையிருக்காது. தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளது.

ஜியோ ரூ. 450 திட்டம் (Jio Rs 450 Plan): 36 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும், இந்த திட்டத்துக்கு டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போக ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் (Jio Special Offer) சலுகைகளும் கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 36 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படும்.
மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையைும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 36 நாட்கள் முழுவதும் 72 ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படும். வாய்ஸ் கால்கள் வழக்கம்போல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் சலுகைகளுடன் கொடுக்கப்பட்டு உள்ளது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் வழக்கமாக கிடைக்கிறது. ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் சலுகைகளை பொறுத்தவரையில், ஜியோ ஹோம் (Jio Home), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகள் கிடைக்கிறது.
மேலும், கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ (Google Gemini AI Pro) சலுகையும் உள்ளது. இதில் ஜியோ ஹோம் சலுகையை புதிதாக பெறும் கஸ்டமர்கள் 2 மாதங்களுக்கு இலவமாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 மாதங்களுக்கு பிறகு கட்டணம் செலுத்தி திட்டத்தை தொடரலாம். ஜியோஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் டிவி (JioHotstar Mobile / TV) சந்தா இதில் கிடைக்கிறது.
இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, இந்த திட்டத்தின் 36 நாட்கள் வேலிடிட்டி முடிந்து, அடுத்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜை செய்தால் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ ஏஐ கிளவுட் சலுகையின் வழியாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஜெமினி ப்ரோ சலுகை 18 மாதங்களுக்கு கிடைக்கும்.
ஸ்மார்ட்போனில் டேட்டா இருந்தால் போதும், 18 மாதங்கள் முழுவதும் இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35,100ஆக இருக்கிறது. இந்த சலுகைகளையே ஜியோ ரூ. 450 திட்டம் கொடுத்துள்ளது. ஒருவேளை அதிக ஓடிடி சலுகைகள் வேண்டுமானால், ஜியோ ரூ.500 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இதில் ஏகப்பட்ட ஓடிடி சந்தா உள்ளது.
ஜியோ ரூ. 500 திட்டம் (Jio Rs 500 Plan): 28 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் வருகிறது. மேலும், யூடியூப் பிரீமியம், பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரிபிளஸ், சன்நெக்ஸ்ட், ஃபேன் கோட், பிளானட் மராத்தி உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








