புது ஆஃபர்.. Jio சிம் இருந்தா அடுத்த 36 நாட்களுக்கு இதுதான் பெஸ்ட் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ், 2GB டேட்டா!
ஜியோ நிறுவனத்தின் புது வருட ப்ரீபெய்ட் திட்டங்கள் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது, 36 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ப்ரீபெய்ட் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற வழக்கமாக சலுகைகள் போக ஓடிடி சந்தா, ஜியோ ஹோம் சந்தா உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கின்றன.
2026 ஆம் ஆண்டு புது வருடத்தை முன்னிட்டு ரூ.103 திட்டம், ரூ.500 திட்டம் மற்றும் ரூ.3,599 திட்டங்களில் கூடுதல் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.103 திட்டம் மற்றும் ரூ.500 திட்டம் ஆகியவை புதிய திட்டங்களாக இருக்கிறது. இப்போது, ரூ.450 திட்டமும் இதில் சேர்ந்துள்ளது. இந்த திட்டம் 36 நாட்கள் வேலிடிட்டி கொடுப்பதால், நல்ல வரவேற்பை பெற்றுள்ளளது.

ஜியோ ரூ. 450 திட்ட விவரங்கள் (Jio Rs 450 Plan Details): 36 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 36 நாட்களுக்கு 72 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். மேலும், 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.
இந்த தினசரி டேட்டா (Daily Data) மற்றும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கொடுத்துள்ளது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் (Unlimited Local, STD, Roaming Voice) இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்களை கொடுத்துள்ளது.
இந்த பேசிக் சலுகைகள் போக கூடுதலாக பல்வேறு சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இதில் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கிடைத்துள்ளது. இந்த ஏஐ கிளவுட் வழியாக 50 ஜிபிக்கு ஸ்டோரேஜ் கிடைத்துள்ளது. மேலும், ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) மூன்று மாதங்களுக்கு கிடைத்துள்ளது.
மொபைல் மற்றும் டிவிகளில் இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு சந்தா கிடைப்பதால், இந்த திட்டத்துக்கு கிடைத்துள்ள 36 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த 48 மணி நேரத்துக்குள் புதிய ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதை செய்தால் மட்டுமே 36 நாட்களுக்கு பிறகும் வழக்கம் போல ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்த முடியும்.
இந்த ஓடிடி சந்தா போக, லைவ் டிவி சேனல்கள் மற்றும் பிரீமியம் ஓடிடி சந்தாவை கொடுக்கும்படி ஜியோஹோம் (JioHome) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா முதல் 2 மாதங்களுக்கு இலவமாக கிடைக்கிறது. 2 மாதம் முடிந்த பிறகு கட்டணம் செலுத்தி திட்டத்தை தொடர்ந்து கொள்ளலாம். இதில் வை-பை டேட்டா (Wi-Fi Data) மற்றும் வை-பை காலிங் (Wi-Fi Calling) சலுகைகளும் கிடைக்கும்.
இந்த கூடுதல் சலுகைகளுடன் 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும்படி ஜெமினி ப்ரோ சந்தா கிடைத்துள்ளது. இந்த திட்டத்தைவிட கூடுதலாக ரூ.50 செலுத்தினால், அதிகப்படியான ஓடிடி சலுகைகளுடன் மற்றொரு திட்டம் கிடைக்கும். இந்த திட்டமும் புது வருடத்தை முன்னிட்டு கொடுக்கப்பட்ட திட்டமாக இருக்கிறது. ஆனால், இதில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.
இந்த திட்டத்தின் விலை ரூ.500 ஆக இருக்கிறது. 28 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். யூடியூப் பிரீமியம், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, சன் நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி, சாவ்பால், பேன்கோட் மற்றும் ஹோய்சோய் ஓடிடி சந்தா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








