Home
News

அம்பானியே இதை தான் ரீசார்ஜ் செய்யுறாரா? இந்தியாவின் அதிக விலை கொண்ட திட்டம்.. என்ன விலை? என்ன நன்மை?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ரூ.4498 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Prepaid Plans) அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே இது தான் இப்போதைய அதிக விலை கொண்ட திட்டம். இந்த திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாமா?

ரிலையன்ஸ் ஜியோ என்றாலே மலிவு விலையில் அதிக நன்மையை வழங்கும் நிறுவனம் என்று தான் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட ப்ரீபெய்ட் பிளான் திட்டத்தையும் ஜியோ நிறுவனம் தான் வைத்துள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் இது தான் இப்போதைய நிஜம். ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு ரூ.4498 விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது.

அம்பானியே இதை தான் ரீசார்ஜ் செய்யுறாரா? இந்தியாவின் காஸ்ட்லீ திட்டம்..

ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் பிளான் (Jio Rs 4498 Prepaid Plan):

ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் பிளான் (Jio Rs 4498 Prepaid Plan) திட்டத்தின் விலையை பார்த்தவுடனே, நம்மில் பலர் கண்டிப்பாக இதுவொரு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் தான் என்பதை கணித்திருப்பீர்கள். இது ஒரு வருட செல்லுபடியுடன் தான் வருகிறது. ஆனால், இது எல்லா வகையான நன்மைகளையும் கவர் செய்து, சரியான பிரீமியம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக (Premium Prepaid Recharge Plan) உருவமறியுள்ளது.

இந்த திட்டத்தின் விலைக்கு ஏற்ற நன்மையை வழங்க ஜியோ நிறுவனம் இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை, தினமும் 2ஜிபி டேட்டா நன்மை போன்ற நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் நிறுவனம் இப்போது 14+ OTT சேனல்களுக்கான சந்தாவை சேர்த்துள்ளது. ஆம், 14 வகையான (ஓவர்-தி-டாப்) சந்தா சேவையை வழங்குகிறது.

ஜியோவின் இந்த ரூ.4498 திட்டம் சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (SunNXT), கன்ச்ச லங்கா (kanchha Lanka), பிளானட் மராட்டி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), டாகுப்பே (Docubay), எபிக்ஆன் (EpicON), போன்ற சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது.

அம்பானியே இதை தான் ரீசார்ஜ் செய்யுறாரா? இந்தியாவின் காஸ்ட்லீ திட்டம்..

ஜியோ வழங்கும் 14+ OTT நன்மைகள்:

இது ஹோய்சோய் (Hoichoi) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) போன்ற பிரபலமான சேனல்களுக்கு அணுகலை வழங்குகிறது. இத்துடன் சேர்த்து ஜியோ எப்போதும் வழக்கமாக வழங்கும் இலவச நன்மைகளான ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) போன்ற சந்தாக்களும் இத்துடன் கிடைக்கிறது. இந்த அணைத்து நன்மைகளும் ஜியோடிவி பிரீமியம் (JioTV Premium) சேவையின் கீழ் கிடைக்கிறது.

குறிப்பாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), மற்றும் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition) போன்ற சேவைகளை மட்டும் நீங்கள் தனியாக அணுக வேண்டியதிருக்கும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஜியோடிவி பிரீமியம் சேவை அணைத்தும் 1 வருட காலம் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மை ஜியோ ஆப்ஸ் (My Jio Apps) மூலம் நீங்கள் உங்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) சந்தாவை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையை பெறுவதற்கு பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்ஸ் இல் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு லாகின் செய்யலாம். இதன் விலையை வைத்து பார்க்கையில் அம்பானியே (Mukesh Ambani) இந்த திட்டத்தை தான் ரீசார்ஜ் செய்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 4498 Prepaid Plan With 14 OTT Benefit Including Disney+ Hotstar Amazon Prime Video Mobile Edition
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X