ஜியோ வெச்ச வேட்டு.. மாதம் ரூ.374 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 14 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
போட்டி டெலிகாம் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைக்கும்படி ஜியோ நிறுவனமானது, அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற 14 ஓடிடி தளங்கள் அடங்கிய புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. வெறும் ரூ.148 மதிப்புள்ள திட்டத்தில் 14 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனை கொடுத்து வியக்கவைக்கிறது.
ஜியோ ரூ 148 திட்ட விவரங்கள் (Jio Rs 148 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 10 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 10 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதோடு சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமியம் போன்ற 12 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 398 திட்ட விவரங்கள் (Jio Rs 398 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போக 14 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. சோனிலிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் உள்ளிட்ட 14 ஓடிடி தளங்களை பயன்படுத்தலாம்.
அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. அதோடு நாளொன்றுக்கு 2 ஜிபி டேடா வீதம் 54 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிட்டி கிடைக்கிறது.
ஜியோ ரூ 1198 திட்ட விவரங்கள் (Jio Rs 1198 Plan Details): இந்த திட்டத்துக்கு 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமகா 168 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்துகொள்ளலாம்.
மேலும், சோனிலிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் உள்ளிட்ட 14 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டியும், மற்ற தளங்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ 4498 திட்ட விவரங்கள் (Jio Rs 4498 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், ஓடிடி என்று அனைத்திலும் 365 நாட்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.
அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், சோனிலிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

அதோடு லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால், டாக்குபே, எபிக்ஆன், ஹோய்சோய் டிவி, ஜியோடிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் மொபைல் நம்பரை பயன்படுத்தினால் கிடைக்கும்.
ஆனால், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஜியோசினிமா பிரீமியம் போன்றவற்றின் சப்ஸ்கிரிப்ஷனை மை ஜியோ ஆப் (My Jio) மூலம் பெற முடியும். இந்த திட்டத்துக்கு இஎம்ஐ (EMI) ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.374 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, நல்ல சலுகை கொண்ட திட்டமாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








