ஜியோ ஆட்டம்.. மாதம் ரூ.374 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. 14 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஒரே திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற 14 முன்னணி ஓடிடி தளங்களின் சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாள்தோறும் 2 ஜிபி டேட்டா போன்ற சலுகைகளையும் ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இந்த புதிய திட்டத்தின் விவரம் இதோ.
ஜியோ ரூ 4498 திட்ட விவரங்கள் (Jio Rs 4498 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், ஓடிடி சலுகைகள் மட்டுல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த நாட்களில் தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம்.
இந்த ஒரு வருட திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்கப்படுகிறது. அதோடு ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது வெல்கம் ஆஃபர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த சலுகைகள் போக 14 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), அமேசான் பிரைம் வீடியோ மொபைல் (Amazon Prime Video Mobile) சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (SunNXT), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), பிளானட் மராத்தி (Planet Marathi), டாக்குபே (Docubay), எபிக்ஆன் (EpicON), கான்ச்சா லங்கா (Kanchha Lanka), சௌபால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi) ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். மேலும், ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) சலுகை கிடைக்கிறது.
இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனை பெற மொபைல் நம்பரை லாகின் செய்தால் மட்டுமே போதும் பயன்படுத்திகொள்ளலாம். ஆனால், அமேசான் பிரைம் வீடியோ சப்ஸ்கிரிப்ஷனை பெற மை ஜியோ ஆப் (My Jio) சென்று சர்வீஸ் ஆக்டிவேஷன் செய்ய வேண்டும். அதேபோல ஜியோசினிமா பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனை மை ஜியோ ஆப்பில் கூப்பன் மூலம் பெற்று கொள்ளலாம்.
ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களிலேயே மிகவும் அதிகமான விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது. அதேபோல அதிகப்படியான சலுகைகளையும் இந்த திட்டம் கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவு ரூ 374 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு 14 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன், 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைப்பது, சற்று லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது.
ஓடிடி சலுகைகள் வேண்டாம், ஒரு வருட வேலிடிட்டியில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டும் போதும் என்று கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ 2545 விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.
ஆகவே, மொத்தமாக 504 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








