Home
News

நீதாவுக்கு கும்பிடு.. ஒப்படைத்த அம்பானி.. மாதம் ரூ.374 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோ பிரீமியம் சந்தா!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது, வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் கிட்டத்தட்ட ரூ.70,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய கூட்டு நிறுவனத்திற்கு முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி தலைமை தாங்க இருக்கிறார். இதனால், ஜியோவில் (Jio) ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?

இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஜியோசினிமா மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய 2 ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் 120 சேனல்கள் ஆகியவற்றின் பங்குகளில் 63.16 சதவீதத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனமும், மீதமுள்ள 36.84 சதவீதத்தை வால்ட் டிஸ்னி (Walt Disney) நிறுவனமும் வைத்திருக்கும்.

ஒப்படைத்த அம்பானி.. மாதம் ரூ.374 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஆகவே, ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium) சந்தாவில் வால்ட் டிஸ்னியின் ஸ்ட்ரீமிங் மற்றும் சேனல்களின் ஒட்டுமொத்த கன்டென்ட்களும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் ஜியோசினிமா பிரீமியம் சந்தா கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் (Jio Prepaid Plan) முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 148 திட்ட விவரங்கள் (Jio Rs 148 Plan Details): இந்த திட்டத்தில் ஓடிடி மற்றும் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, 10 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். இந்த 10 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது.

இந்த டேட்டா சலுகை போக 12 ஓடிடி தளங்களின் சந்தாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), எபிக்ஆன் (EPIC On) ஆப்களை பயன்படுத்தலாம்.

ஒப்படைத்த அம்பானி.. மாதம் ரூ.374 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

அதுமட்டுமல்லாமல், கான்ச்சா லங்கா (Kanchha Lannka), சௌபால் (Chaupal), டாக்குபே (DocuBay), ஹோய்சோய் டிவி (Hoichoi TV) மற்றும் பிளானட் மராத்தி (Planet Marathi) ஆகிய ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது

ஜியோ ரூ 1198 திட்ட விவரங்கள் (Jio Rs 1198 Plan Details): இந்த திட்டத்தில் கூடுதலாக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.

168 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அதோடு வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. தினசரி அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள், 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்துகொள்ள முடியும். இந்த திட்டத்தில் மேற்கூறிய 12 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

அதோடு 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile) சந்தா மற்றும் 84 நாட்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் (Amazon Prime Video Mobile) சந்தா கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 4498 திட்ட விவரங்கள் (Jio Rs 4498 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி, ஓடிடி போன்ற சலுகைகள் அனைத்தும் ஆண்டு முழுவதும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. நாள்தோறும் 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். முந்தை திட்டத்தை போலவே 14 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்தில் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ உள்பட அனைத்து ஓடிடி ஆப்களுக்கும் ஒரு வருடம் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதற்கான மாதாந்திர செலவானது, ரூ.374ஆக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 4498 Plan Offer 365 Days Validity, 730GB Data 12 OTT Subscriptions With JioCinema Premium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X