ஜியோ சிம் இருக்கா.. பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
ஏர்டெல் நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். அதேபோல் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா தரும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 449 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த ஜியோ திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1199 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது (Jio Rs 1799 prepaid plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதாவது அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








