2026 ஆரம்பமே Jio அதிரடி.. ரூ.449 முதல்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 84 நாட்கள் வேலிடிட்டி..
ஜியோ நிறுவனம் 2026 இல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தாமல் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் தரும் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் தான் அதிக சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 2026 இல் பட்ஜெட் விலையில் தினமும் 3ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஜியோ ரூ.499 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கொடுக்கப்படுகிறது.
குறிப்பாக மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1199 prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.
மேலும் இந்த திட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவும் இதில் உள்ளது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டத்துக்குக் கொடுக்கப்படுகிறது. பின்பு ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்
அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications








