நீங்க கேட்டதை அள்ளித் தரும் அம்பானி.. தினமும் 3GB டேட்டா.. பட்ஜெட்ல கம்மி விலை.. எந்த Jio பிளான்னு பாருங்க..
ஜியோ (Jio) வாடிக்கையாளர்களை குஷி அடைய செய்யும் வகையில், முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio prepaid plan) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்கும் குறைந்த விலை திட்டமாக (Jio 3GB data benefit plan) இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் விலை மற்றும் இதன் நன்மை பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்ட (Jio prepaid recharge plans) பட்டியலில் நிறுவனம் இப்போது மொத்தம் மூன்று 3GB தினசரி டேட்டா நன்மை வழங்கும் திட்டங்களை (Jio 3GB data plans) ஜியோ வழங்குகிறது. இந்தியாவில் பட்ஜெட் பயனர்கள் தான் அதிகம் (budget telecom users) என்பதனால், ஜியோ இப்போது ஜியோ ரூ. 449 திட்டம் (Jio Rs 449 Plan) என்ற பெயருடன் புது 3GB டேட்டா பிளானை அறிமுகம் செய்துள்ளது.

நீங்க கேட்டதை அள்ளித் தரும் அம்பானி.. தினமும் 3GB டேட்டா.. பட்ஜெட்ல கம்மி விலை:
இந்த Jio திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இதில் லோக்கல் (local), எஸ்டிடி (STD) மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் சேவை (international roaming service) ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. ஆம், வெறும் 449 ரூபாய்க்கு ஜியோ இப்போது 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை (Jio 28 days validity plan) வழங்குகிறது.
இந்த திட்டம் 28 நாட்களுக்கு தினமும் 3GB டேட்டா நன்மையை (daily 3GB data benefit) வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் தினசரி 3GB டேட்டா வரம்பிற்கு பிறகு, டேட்டாவின் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இத்துடன், இந்த திட்டத்தில் SMS நன்மையாக தினசரி உங்களுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மை வழங்குகிறது.
ஜியோ ரூ. 449 திட்டம் (Jio Rs 449 Plan):
இது தவிர இந்த திட்டத்துடன் வழக்கமாக கிடைக்கும் ஜியோ இலவச நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது. கூடுதல் இலவச நன்மையாக இந்த திட்டத்துடன் ஜியோ டிவி சந்தா (Jio TV subscription), ஜியோ சினிமா சந்தா (Jio Cinema Subscription) மற்றும் ஜியோ கிளவுட் சந்தா (Jio Cloud Subscription) ஆகியவை கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்குகிறது.
நீங்கள் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்கும் திட்டத்தை குறைந்த செலவுடன் தேடுகிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்களுக்கானது. அதுவும் ரூ. 500 என்ற கட்டணத்தை விட குறைந்த விலையில் வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மை மற்றும் தினசரி 3GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை எந்தவித தடையுமில்லாமல் வழங்குகிறது. ஜியோவின் மற்ற 2 திட்டங்கள் ரூ. 1000 விலைக்கு மேல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








