Home
News

சிங்கிள் ரீசார்ஜில் 3 சிம் கார்டுகளுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 75 ஜிபி டேட்டா!

ஜியோ நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் (Postpaid Plan) ஃபேமிலி சிம் கார்டுகளையும் ஆட் செய்து வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இப்படி கம்மியான விலைக்கு கிடைக்கும் திட்டமாக ஜியோ ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் ஓடிடி, கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட கூடுதல் சலுகைகளும் இருக்கின்றன.

ஜியோ ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 449 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பிரைமரி சிம் கார்டுகளுக்கு 75 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். பில் சைக்கிளுக்கு முன்னதாக இந்த டேட்டாவை முடித்துவிட்டதால், 1 ஜிபிக்கு ரூ.10 செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம். 3 ஃபேமிலி சிம் கார்டுகளை ஆட் ஆன் செய்து கொள்ளலாம். ரூ.150 செலுத்த வேண்டும்.

சிங்கிள் ரீசார்ஜில் 3 சிம் கார்டுகளுக்கு வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

அதாவது, இந்த திட்டத்தில் விலை ரூ.449ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.150 கூடுதலாக செலுத்தினால், 1 சிம் கார்டை ஆட் செய்து கொள்ளலாம். 2 சிம் கார்டுகளாக இருந்தால், ரூ.300 செலுத்த வேண்டும். இப்படி மொத்தமாக 3 சிம் கார்டுகளை ஆட் செய்ய முடியும். இப்படி ஆட் செய்யப்படும் சிம் கார்டுகளுக்கு தலா 5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

பிரைமரி மற்றும் ஃபேமிலி சிம் கார்டுகள் அனைத்துக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த திட்டத்தில் 75 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கிடைக்கிறது.

ஆகவே, 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் 5ஜி ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு எந்த லிமிட்டும் இல்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். கூடுதலாக ஓடிடி சந்தா, ஏஐ கிளவுட் சந்தா மற்றும் ஏஜ சாட் பாட் சந்தாவையும் இந்த ஜியோ ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கிறது.

இந்த சந்தாவில் ஹாலிவுட் கன்டென்ட்களும் கிடைக்கும். இதுபோக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கொடுக்கப்படும். இந்த சந்தாவில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) கிடைக்கும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப்பை டவுன்லோட் செய்து, ஜியோ மொபைல் நம்பரை லாகின் செய்தால் போதும், இந்த ஸ்டோரேஜ் கிடைக்கும்.

மேலும், கூகுள் நிறுவனத்தின் பிரீமியம் அணுகல்களை கொடுக்கும்படியான ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை இந்த ஜியோ ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பில் சைக்கிள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இந்த ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்தடுத்த பில் சைக்கிள்களுக்கு செல்லும்போது இதுவும் கிடைக்கும்.

இந்த ஜெமினி ப்ரோ சந்தாவில் நானோ பனானா இமேஜ் ஜெனரேஷன் அணுகல் கிடைக்கிறது. 5 டிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. கூகுள் டிரைவ் (Google Drive), ஜிமெயில் (Gmail) உள்ளிட்ட ஆப்களில் இந்த 5 டிபிக்கான ஸ்டோரேஜை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு சலுகைகளும் இந்த ஜியோ ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Jio Rs 449 Postpaid Plan 75 GB Data Voice Calls 3 Add on SIM Card Check Family Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X