Home
News

அதான் சார் அம்பானி.. ரூ.449-க்கு வாரி வழங்கிய Jio.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 75 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் நிறுவனங்களில் இருக்கும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு ஃபேமிலி சிம் கார்டுகளை ஆட் செய்து கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது. இதில் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் ஃபேமிலி திட்டத்தில் ஜியோ நிறுவனம் பட்டையை கிளப்பும்படியான சலுகைகளை கொடுத்து இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தின் ஆரம்ப விலை போஸ்ட்பெய்ட் திட்டமாக ரூ.349 திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் ஃபேமிலி சிம் கார்டுகளை ஆட் செய்ய முடியாது. இதற்கு அடுத்து கிடைக்கும் ரூ.449 திட்டத்தில் ஃபேமிலி சிம் கார்டுகளை ஆட் செய்யலாம். ஆனால், திட்டத்தில் விலையில் இருந்து கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

அதான் சார் அம்பானி.. ரூ.449-க்கு வாரி வழங்கிய Jio.. வாய்ஸ் கால்கள்!

ஜியோ ரூ.449 திட்டம் (Jio Rs 449 Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஃபேமிலி சிம் ஆட்-ஆன், ஓடிடி சந்தா, ஏஐ சந்தா உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்தை பெற்றால், பில் சைக்கிள் வரையில் 75 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆனால், பில் சைக்கிள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த ஜியோ ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது.

மேலும், ஃபேமிலி சிம் கார்டை ஆட் செய்ய ரூ.150 கட்டணமாக இருக்கிறது. அதிகபட்சம் 3 சிம் கார்டுகளை இந்த திட்டத்தில் ஆட் செய்து கொள்ளலாம். ஒரு சிம் கார்டுக்கு ரூ.150 செலுத்து ஆட் செய்து கொள்ளலாம். ஆகவே, திட்டத்தின் விலை, கூடுதலாக ஆட் செய்யும் சிம் கார்டுக்கான விலை மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வேண்டும்.

இப்படி ஆட் செய்யப்படும் சிம் கார்டுக்கும் ன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும். ஆனால், டேட்டா குறைவாகவே கொடுக்கப்படும். பில் சைக்கிள் வரையில் 5 ஜிபி டேட்டாவை மட்டுமே பெற முடியும்.

இப்போது, ஓடிடி, ஏஐ மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். இந்த ஜியோ ரூ.449 திட்டத்தில் ஜியோஹாஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) அணுகலுடன் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சந்தாவும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த கிளவுட் ஸ்டோரேஜ் போலவே ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா வழியாக 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக நானோ பனானா (Nano Banana) உள்ளிட்ட பிரீமியம் அணுகல்களை இந்த ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்படுகிறது. ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கேன்வா சந்தாவும் இலசமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், வழக்கமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. இந்த சந்தாவை ஜியோ ரூ.449 திட்டம் கொடுக்கவில்லை. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஃபேமிலி சிம் ஆட், ஓடிடி சந்தா, கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சலுகைகளுக்கு இந்த திட்டத்தை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 449 Plan With Unlimited Voice Calls 75 GB Data Check Postpaid Family Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X