Home
News

Jio-வா கொக்கா? 1 ரூபாய் வித்தியாசத்தில் மக்கள் மனம் மாறுது.. Jio 449 பிளான் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ..

ஜியோ (Jio) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய் விதியசத்தில் 2 மகத்தான திட்டங்களை வழங்குகிறது. வெறும் ஒரே ஒரு ரூபாய் வித்தியாசத்தில் இத்தகைய நன்மையை வழங்க முடியுமா? என்று வியக்கும் வகையில், ஜியோ வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு திட்டங்களில் ஒரு திட்டம் தினசரி 3GB டேட்டாவை வழங்குகிறது. மற்றொரு திட்டம் அதிக நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை தடையில்லாமல் வழங்குகிறது. இந்த இரண்டு ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மற்றும் நன்மை விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

டிராய் (TRAI) என்றழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) வெளியிட்ட உத்தரவின் படி, ஜியோ நிறுவனம் சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வாய்ஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகம் (Jio launched voice only plans) செய்து, ரீசார்ஜ் செய்ய வழங்க துவங்கியது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும், பல வாடிக்கையாளர்கள் டேட்டா (data) நன்மையோடு கிடைக்கும் திட்டங்களை தான் இன்னும் ரீசார்ஜ் (recharge) செய்ய பார்க்கிறார்கள்.

Jio-வா கொக்கா? 1 ரூபாய் வித்தியாசத்தில் மக்கள் மனம் மாறுது..

Jio-வா கொக்கா? 1 ரூபாய் வித்தியாசத்தில் மக்கள் மனம் மாறுது:

இப்போது ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த அதன் புதிய ஜியோ ரூ. 448 வாய்ஸ் ஒன்லி பிளான் (Jio Rs 448 Voice Only Plan) திட்டத்திற்கு பிறகு, பல வாடிக்கையாளர்கள் இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முன்வந்து, இறுதியில், இந்த திட்டத்தை விட வெறும் 1 ரூபாய் வித்தியாசத்தில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோ ரூ. 449 திட்டத்தை (Jio Rs 449 Plan) ரீசார்ஜ் செய்கிறார்கள் என்ற திடீர் திருப்பம் உருவாகியுள்ளது.

ஆம், ஜியோ ரூ. 448 வாய்ஸ் ஒன்லி பிளான் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வரும் ஜியோ வாடிக்கையாளர்கள் பலர், இப்போது இறுதி நேரத்தில் மனம் மாறி, ஜியோ வழங்கும் ஹெவி டேட்டா ப்ரீபெய்ட் திட்டமான (heavy data plan) ஜியோ ரூ. 449 திட்டம் (Jio Rs 449 Plan) என்ற திட்டத்தை ரீசார்ஜ் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம், வெறும் 1 ரூபாய் வித்தியாசத்தில் (just 1 rupee difference Jio plan) இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மையே என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.

வெறும் 1 ரூபாய் வித்தியாசத்தில் இப்படி ஒரு Jio ப்ரீபெய்ட் திட்டமா?

சரி, இந்த இரண்டு திட்டங்கள் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். அப்போது தான், என் 448 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வரும் வாடிக்கையாளர்கள் 449 திட்டத்தை ரீசார்ஜ் செய்கிறார்கள் என்பது நமக்கு புரியும். முதலில் ஜியோ ரூ. 448 வாய்ஸ் ஒன்லி பிளான் (Jio Rs 448 Voice Only Plan) திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

ஜியோ ரூ. 448 வாய்ஸ் ஒன்லி பிளான் (Jio Rs 448 Voice Only Plan):

இந்த ஜியோ ரூ. 448 வாய்ஸ் ஒன்லி பிளான் (Jio Rs 448 Voice Only Plan) திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 84 days validity plan) உடன் வருகிறது. இதுவொரு வாய்ஸ் ஒன்லி திட்டம் (voice only plan) என்பதனால் இத்துடன் டேட்டா நன்மை (no data plan) எதுவும் கிடைக்காது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை மற்றும் 1000 SMS நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் Jio TV, Jio Cinema மற்றும் Jio Cloud இலவச நன்மைகளையும் வழங்குகிறது.

ஜியோ ரூ . 449 திட்டம் (Jio Rs 449 Plan):
இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு (28 days validity plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குவதோடு தினசரி 100 எஸ்எம்எஸ் (daily 100 SMS) நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 3GB டேட்டா (3GB data per day) நன்மையை வழங்குகிறது. ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் மலிவு விலையில் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்கும் ஒரே திட்டம் (Low price jio plan with 3GB data daily) இதுவாகும். இத்துடன் வழக்கம் போல Jio TV, Jio Cinema மற்றும் Jio Cloud இலவச நன்மைகளும் கிடைக்கிறது.

வெறும் 1 ரூபாய் வித்தியாசத்தில் வாய்ஸ் கால்ஸ், 3GB டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மையோடு இத்தகைய ரீசார்ஜ் பிளான் கிடைத்தால், இறுதி நேரத்தில் சிலருடைய மனம் மாரத்தானே செய்யும். மறுபுறம், வாய்ஸ் ஒன்லி நன்மையுடன் 1000 SMS வழங்கும் திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. அதாவது ஏறக்குறைய இந்த் திட்டம் 3 மாதங்களுக்கு செல்லுபடி ஆகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 449 Plan and Jio Rs 448 Plan Is Just 1 Rupee Difference But One Plan Provides Huge Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X