கண்ணை மூடிக்கிட்டு ரீசார்ஜ் பண்ணுவீங்க.. இனி 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. Jio கஸ்டமர்கள் குஷி!
ஜியோ (Jio) நிறுவனத்தின் கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படியான விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டம் (Voice Only Plan) ஒன்று கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்கு இதைவிட கம்மியான விலைக்கு ஜியோவில் திட்டம் கிடையாது. இந்த வாய்ஸ் திட்டத்தில் வேறு என்னென்ன சலுகைகள் கிடைக்கும், எந்த கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பொருந்தமாக இருக்கும், இதை எப்படி ரீசார்ஜ் செய்வது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கு முதலில் நீங்கள் ஜியோ வெப்சைட் அல்லது ஜியோ ஆப் மூலம் வேல்யூ திட்டங்களுக்கு (Value Plans) செல்ல வேண்டும். அதில் மூன்று திட்டங்கள் இடம்பெற்றிருக்கும். இவற்றில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ரூ 448 வாய்ஸ் ஒன்லி திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இப்போது, சலுகைகளை பார்பபோம்.

ஜியோ ரூ 448 வாய்ஸ் ஒன்லி திட்டம் ஆஃபர்கள் (Jio Rs 448 Voice Only Plan Offers): பெயரிலேயே வாய்ஸ் ஒன்லி திட்டம் என்று இருப்பதால், இதில் டேட்டா சலுகைகள் கொஞ்சமும் கிடைக்காது. அதே நேரத்தில் வெறும் வாய்ஸ் கால்கள் மட்டுமே கிடைக்குமா என்றாலும், அதுதான் இல்லை. எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ நிறுவத்தின் 2 ஆப்களின் சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆகவே, இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும், அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls), எஸ்டிடி கால்கள் (STD Calls) மற்றும் ரோமிங் கால்களின் (Roaming Calls) சலுகைகள் கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் கிடைப்பதால், 84 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைத்துவிடுகிறது.
இதன் மூலம் இன்கம்மிங் எஸ்எம்எஸ்களும் கிடைக்கிறது. அவுட்கோயிங் எஸ்எம்எஸ் சலுகையை பார்க்கையில், மொத்தமாக 1000 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இதை தேவைக்கு ஏற்ப அந்த 84 நாட்கள் வேலிடிட்டியில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோ நிறுவனத்தின் ஜியோ டிவி (Jio TV) ஆப் சந்தா கிடைக்கிறது.
மேலும், உங்களது ஜியோ நம்பரை வைத்து ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப் பயன்படுத்தி கொள்ளலாம். மேற்கண்ட சலுகைகளை மட்டுமே இந்த வாய்ஸ் ஒன்லி திட்டம் கொடுக்கிறது. வேல்யூ திட்டங்களின் கீழ் 2 வாய்ஸ் கால்கள் திட்டம் மற்றும் 1 லம்ப்-சம் டேட்டா திட்டம் கிடைக்கிறது. ஒருவேளை உங்களுக்கு இதைவிட மலிவான விலைக்கு திட்டம் வேண்டுமானல், இருக்கிறது.
ஜியோ ரூ 189 வேல்யூ திட்டம் ஆஃபர்கள் (Jio Rs 189 Value Plan Offers): இந்த திட்டத்துக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் என்று மூன்று சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரி வரம்பில் கிடைக்காது. லம்ப்-சம் சலுகையில் மட்டுமே கிடைக்கும். ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி என்றால், அதற்கு மொத்தமாக 2 ஜிபி டேட்டா வருகிறது.
அதேபோல மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. மற்ற சலுகைகள் முந்தைய வேல்யூ திட்டத்தை போலவே இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி கால்கள் மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கிறது. ஜியோ டிவி ஆப் மற்றும் ஜியோ கிளவுட் ஆப் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த வேல்யூ திட்டத்திங்கள் கம்மி விலைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








