Jio கஸ்டமர்களுக்கு இனி காசு மிச்சம்.. 28 நாள், டெய்லி 2GB வழங்கும் திட்டத்தின் விலை குறைப்பு.. எந்த ரீசார்ஜ்?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது அதன் 2 டேட்டா-ஒன்லி பிளான்களுக்கு ஸ்டேன்ட்அலோன் வேலிடிட்டியை வழங்கிய மறுபக்கம், 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றின் விலையையும் குறைத்துள்ளது.
அதென்ன திட்டம்? ஜியோ நிறுவனம் தனது ரூ.448 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.445 ஆக குறைத்துள்ளது. இந்த திட்டம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன் லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

கூடுதலாக, ரூ.445-ஐ ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜீ5 (Zee5), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), சோனி லைவ் (SonyLIV) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) உள்ளிட்ட பல்வேறு வகையான ஓடிடி (OTT) இயங்குதளங்களான இலவச அணுகல்களும் கிடைக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி ரிலையன்ஸ் ஜியோ அதன் 2 டேட்டா ஆட் ஆன் திட்டங்களின் (Data Add on Plans) வேலிடிட்டியை திருத்தி உள்ளது. அந்த திட்டங்கள் ரூ.69 மற்றும் ரூ.139 மதிப்புள்ள டேட்டா பிளான்கள் (Jio Rs 69 and Rs 139 Data Plans) ஆகும். தற்போது இந்த 2 திட்டங்களும் ஸ்டேண்ட்அலோன் வேலிடிட்டி (Standalone Validity) கொண்ட திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.
முன்னதாக இந்த இரண்டு திட்டங்களும், ஒரு ஜியோ மொபைல் நம்பரில் உள்ள மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும் படியான வேலிடிட்டியை கொண்டிருந்தன. உதாரணத்திற்கு உங்களுடய மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி 28 நாட்கள் என்றால் ரூ.69 அல்லது ரூ.139 திட்டங்களின் கீழ் கிடைக்கும் டேட்டாவும் (டேட்டா நன்மை தீரும் வரையிலாக) 28 நாட்களுக்கு கிடைக்கும்.
ஆனால் இனிமேல் இந்த இரண்டு ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களும் வெறும் 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது உங்களுடைய மெயின் ரீசார்ஜ் ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடி ஆனாலும் சரி அல்லது 1 ஆண்டுக்கு செல்லுபடி ஆனாலும் சரி.. நீங்கள் ரூ.69 அல்லது ரூ.139 டேட்டா பிளான்களை ரீசார்ஜ் செய்தால், அதன்கீழ் கிடைக்கும் டேட்டா நன்மை 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் சேவையின் கீழ் ரூ.189 பிளானை மீண்டும் கொண்டு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்ப்போது இந்த திட்டம் ஜியோ ப்ரீபெய்ட் பிரிவில் உள்ள வேல்யூ (Value) பிரிவின் கீழ் உள்ள மலிவு விலை பேக்ஸ் (Affordable packs) என்கிற துணைப்பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டு, ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
ரூ.189 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதன் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை இது மொத்தம் 2ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோடிவி (JioTV), பிரீமியம் சந்தா இல்லாத ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) ஆகியவற்றிற்கான இலவச அணுகலும் கிடைக்கும்.
மேற்கண்ட எல்லா மாற்றங்களுமே டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின் கீழ், ஜியோ நிறுவனம் 2 புதிய வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர் வருகின்றன.
முன்னதாக ரீசார்ஜ் செய்ய கிடைத்த ரூ.189 திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல ரூ.448 மதிப்புள்ள வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் விலையில் இருப்பதால், ரூ.448 ப்ரீபெய்ட் [பிளான் ஆனது ரூ.445 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட எல்லா திட்டங்களும் ஜியோ இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








