Home
News

இறங்கி ஆடும் அம்பானி.. ரூ.448-க்கு அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 12 ஓடிடி சந்தா.. 2 ஜிபி டேட்டா!

ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.448 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல்,, சோனிலிவ், ஜீ5, ஜியோ சினிமா பிரீமியம் போன்ற 12 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கொடுத்து அந்த நிறுவனம் மிரளவிட்டுள்ளது. இவ்வளவு சலுகைகளை மற்ற நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாது. இந்த ஜியோ ஓடிடி திட்டத்தின் (Jio OTT Plan) முழு விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ ரூ 448 திட்ட விவரங்கள் (Jio Rs 448 Plan Details): அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கொண்ட திட்டம் வேண்டும். அதுவும் மலிவான விலையில் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஜியோ ரூ 448 திட்டம் பக்காவான தேர்வாகும். ஏனென்றால், டேட்டா மற்றும் ஓடிடி மட்டுமல்லாமல், கூடுதலாக வாய்ஸ் கால்களையும் இதில் செய்து கொள்ளலாம்.

இறங்கி ஆடும் அம்பானி.. ரூ.448-க்கு அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்ஸ்!

ஜியோ கட்டண உயர்வுக்கு பிறகு கஸ்டமர்களை கவர இந்த திட்டம் களமிறக்கப்பட்டது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஆகவே, லோக்கல் (Local), எஸ்டிடி (STD), ரோமிங் (Roaming) கால்களை செய்து கொள்ள முடியும். தினசரி டேட்டாவை பார்க்கையில் 2 ஜிபி கிடைக்கிறது.

இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை பெற முடியும். இது திட்டத்துக்கு கிடைக்க கூடிய டேட்டாவாகும். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, ஜியோ நிறுவனத்தில் 5ஜி டேட்டா சேவை கிடைக்கும் பகுதிகளில் இந்த டேட்டாவை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

எனவே, டேட்டாவை பற்றிய கவலையே இந்த திட்டத்தில் கிடையாது. இதற்கு ஏற்ப 12 ஓடிடி ஆப்களின் சந்தா (12 OTT Subscription) கிடைக்கிறது. டேட்டாவும் அதிகமாக கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு இந்த திட்டம் மாற்று இல்லாத திட்டமாக இருக்கிறது. ஓடிடி ஆப்களின் சந்தாவை பார்க்கையில், சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) மற்றும் சன்நெக்ஸ்ட் (SunNXT) கிடைக்கிறது.

இதுபோக ஜியோ நிறுவனத்தின் ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium) மற்றும் ஜியோ டிவி பிரீமியம் (JioTV Premium) சந்தாவை பெற்று கொள்ள முடியும். மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), ஃபேன்கோட் (FanCode) மற்றும் சாவ்பால் (Chaupal) ஆகிய ஆப்களையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இறுதியாக ஜியோகிளவுட் (JioCloud) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. மேலும், 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, அனைத்து ஓடிடி ஆப்களையும் 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல திட்டத்தின் சலுகைகளும் 28 நாட்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியதாகும்.

மேற்கண்ட் ஓடிடி ஆப்களின் சந்தா மட்டும் போதும் மற்ற சலுகைகள் வேண்டாம் என்றால், ரூ.175 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. இருப்பினும், 10 ஜிபி டேட்டா மட்டும் கொடுக்கப்படும். கிட்டத்தட்ட டேட்டா வவுச்சரை போலத்தான் சலுகைகளை கொண்டிருக்கிறது.

ஆனால், கூடுலாக 10 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கிறது. ஆகவே, இதை திட்டத்தை பெற ஆக்டிவ் திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும். சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமியம், லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரிபிளஸ், சன்நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா மற்றும் பிளாட் மராத்தி, சாவ்பால், ஹோய்சோய் மற்றும் ஜியோ டிவி ஆப்களின் சந்தாவை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 448 Plan With Unlimited Voice Calls 2GB Daily Data 12 OTT Subscription 28 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X