அந்த மனசு இருக்கே.. 84 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.448 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள்!
டேட்டா வேண்டாம், ஓடிடி வேண்டாம், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட திட்டம் போதுமானால், அடிமட்ட விலைக்கு கிடைக்கும் ஜியோ ரூ.448 திட்டத்துக்கு செல்லலாம். இதைவிட மலிவான விலைக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் கிடையாது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
ஜியோ ரூ 448 திட்ட விவரங்கள் (Jio Rs 448 Plan Details): இது வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருப்பதால், 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கிடைக்கும். தினசரிக்கு எஸ்எம்எஸ் கிடைக்காது. 1000 எஸ்எம்எஸ் மொத்தமாக கொடுக்கப்பட்டுவிடும். இதை தேவைக்கு ஏற்ப அதிகமாகவும், கம்மியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்க் போக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. 84 நாட்கள் வேலிடிட்டியை மலிவான விலைக்கு பெற விரும்பும் கஸ்டமர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், டேட்டா கிடைக்காது. இருப்பினும் டேட்டா வவுச்சர்களை (Data Voucher) ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
ரூ.450 விலைக்குள் தினசரி டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், ஜியோ ரூ.445 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாமல். ஆனால், இதில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கும். அதாவது, தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா உள்ளிட்டவை கிடைக்கும். இதில் என்னென்ன சலுகைகள்?
ஜியோ ரூ 445 திட்ட விவரங்கள் (Jio Rs 445 Plan Details): முந்தைய திட்டத்தில் கிடைக்க அன்லிமிடெட் லோக்கல், (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) இதிலும் கிடைக்கும். ஆனால், தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை இதில் பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் கொடுத்து இருக்கிறது. 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவும் கிடைக்கும்.
இதை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். 5ஜி ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டாவில் எந்த குறையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு இருக்காது. ஓடிடி சலுகைகைகளை பார்க்கையில், சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) கிடைக்கிறது.
மேலும், சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மாராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஜியோ டிவி (JioTV) ஆப் வழியாக இந்த ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் கிடைக்கிறது. இதை ஜியோ மொபைல் நம்பர் வைத்து தனியாக லாகின் செய்து பெற்று கொள்ளலாம்.
இந்த 1 ஓடிடி ஆப்புக்கு மட்டும் 3 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும். மற்ற ஆப்களுக்க 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வழியாக 50 ஜிபிக்கு ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இதை 18 மாதங்கள் வரையில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications