Home
News

புது பிளான்.. அடிமட்ட விலை.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா.. Jio யூசர்கள்‌ குஷிதான்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கட்டண உயர்வுக்குப் பிறகு பல்வேறு ப்ரீபெய்டு (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்டு (Postpaid) திட்டங்களில் மாற்றங்களை செய்தது. இதனால் மலிவாக திட்டங்களை கொடுக்கும் (Cheapest Plan) பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறும் கஷ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆகவே, கஸ்டமர்களை தன் பக்கம் சாய்க்க பல்வேறு சலுகைகளை ஜியோ வாரி வழங்குகிறது. இப்போது, புதிய ப்ரீபெயட் திட்டம்‌ (New Prepaid Plan) தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விவரங்கள் இதோ.

ஜியோ நிறுவனத்தின் கட்டணங்கள் அதிகரித்த பிறகு அதிகப்படியான சலுகைகளை கொடுக்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்யும் பழக்கத்துக்கு கஸ்டமர்கள் வந்துவிட்டனர். வாய்ஸ் கால்களுக்கு (Voice Calls), டேட்டாவுக்கு (Data) மற்றும் ஓடிடிக்கு (OTT) என்று தனித்தனியாக செலவு செய்யாமல், ஒரே திட்டத்தில் அதை பெற முடிவெடுத்துள்ளனர்.

புது பிளான்! அடிமட்ட விலை.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா!

இப்படி ரீசார்ஜ் செய்யும் ஜியோ கஸ்டமர்களுக்கு பக்காவான திட்டமாக ஜியோ ரூ 448 மதிப்பில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் அமைந்துவிட்டது. கிட்டத்தட்ட அனைத்து சலுகைகளையும் பேக் செய்து கொடுத்துள்ளது. அதிகப்படியான ஓடிடி சந்தா தேடும் கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலையில் 13 ஓடிடி ஆப்களின் பண்டில் கிடைக்கிறது. முதலில் சலுகைகளை பார்ப்போம்.

ஜியோ ரூ 448 திட்ட விவரங்கள் (Jio Rs 448 Plan Details): இந்த ஜியோ ப்ரீபெய்டு திட்டத்தில் (Jio Prepaid Plan) தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், 13 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதில் ஜியோ டிவி பிரீமியம் மற்றும் ஜியோ சினிமா பிரீமியம் ஓடிடி தளங்களின் சந்தாவும் அடங்கும்.

ஆகவே, இந்த ஜியோ ஓடிடி பண்டில் (Jio OTT Bundle) திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை (Daily 2GB Data) பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, ஜியோ கஸ்டமர்களுக்கு மொத்தமாக 56 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த 2 ஜிபிக்கு பிறகு வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த மூன்று சலுகைகளும் போக 13 ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம். எனவே, சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), ஜியோ டிவி பிரீமியம் (JioTV Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) ஆப்களின் சந்தா கிடைக்கிறது.

மேலும், டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi), சாவ்பால் (Chaupal) மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கான ஃபேன்கோட் (FanCode) சந்தா‌ கிடைக்கிறது. இதுபோக வழக்கமாக கிடைக்கும் ஜியோகிளவுட் (JioCloud) சந்தாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

இந்த ஓடிடி சலுகைகள் போக, ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. ஜியோ சினிமா பிரீமியம் சந்தாவுடன் மற்ற சலுகைகளும் கொண்ட மிகவும் மலிவான திட்டம் இதுவாகும். இல்லயென்றால், ரூ.29 செலுத்தி தனியாகவே ஜியோ சினிமா பிரீமியம் சந்தவை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சந்தாவுக்கு ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கப்படும். மேற்கண்ட திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மிகவும் மலிவான விலையில், அன்லிமிடட் கால்கள் தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல் அதிகப்படியான ஓடிடி சலுகையும் வேண்டுமானால், இந்த ஜியோ ப்ரீபெய்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 448 Plan With 28 Days Validity 2GB Data Voice Calls 13 OTT Subscription New Jio Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X