ரூ.5.3 செலவு.. Jio SIM க்கு பிரம்மாஸ்திரம்.. 84 நாட்கள் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள்.. கஸ்டமர்கள் குஷி!
ஒரு நாளுக்கு ரூ.5.3 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தால், எப்படி இருக்கும்.. கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களும் கிடைத்தால், சொல்லவா வேண்டும்.. ரீசார்ஜ் அதிகமாக செய்யப்பட இதுவே போதும். அப்படியான ஜியோ (Jio) ப்ரீபெய்ட் திட்டத்தை இப்போது பார்க்கலாம்.
டிராய் என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கொடுக்க உத்தரவிட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களும் கொடுக்க தொடங்கின. இதில் ஜியோ ஒரு நாளுக்கு ரூ.5.3 செலவில் கொடுக்கிறது.

ஆகவே அந்த நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு பிடித்தமான மற்றும் அதிகம் ரீசார்ஜ் செய்யப்படும் திட்டமாகவே இது மாறிவிட்டது. ரூ.5.3 செலவாக இருப்பதால், இந்த விலைக்கு ரீசார்ஜ் செய்துவிடலாம் என்று நினைக்க வேண்டும். இது ஒரு நாளுக்கான செலவு மட்டுமே. இந்த திட்டத்தின் விலை ரூ.448 ஆக இருக்கிறது. இது வேல்யூ திட்டமாகவும் இருக்கிறது.
ஜியோ ரூ.448 திட்ட ஆஃபர்கள் (Jio Rs 448 Plan Offers): 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, ஒரு நாளுக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால், ரூ.5.3 மட்டுமே தேவைப்படும். இந்த விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே பயன்படுத்த முடியும். சிம் கார்டு தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும். ஜியோ ஆப்களும் கிடைக்கும்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 84 நாட்கள் முழுவதும் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை அன்லிமிடெட் சலுகையில் செய்து கொள்ளலாம். 1000 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படும். இந்த எஸ்எம்எஸ்களை மற்ற திட்டங்களை போல நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் அனுப்ப வேண்டிய அவசியம் கிடையாது. தேவைக்கு ஏற்ப அனுப்பி கொள்ளலாம்.
ஆகவே, அனுப்பினால் மட்டுமே குறையும். ஒரு நாள் முடிந்துவிட்டதால், குறையாது. இப்போது, ஜியோ ஆப்களின் சலுகைகளுக்கு வருவோம். ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆப்கள் கிடைக்கும். இந்த திட்டம் 84 நாட்களுக்கு மட்டும் கிடைக்கிறது. வருடம் முழுவதும் இதேபோல வாய்ஸ் ஒன்லி திட்டம் வேண்டுமானால், மற்றொரு திட்டத்துக்கு போகலாம்.
ஜியோ ரூ.1748 திட்ட ஆஃபர்கள் (Jio Rs 1748 Plan Offers): இதில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், 1 வருடத்துக்கு வேறு ரீசார்ஜ் செய்ய வேண்டியது கிடையாது. அதே நேரத்தில் இதில் டேட்டா கொடுக்கப்படாது என்பதையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் 336 நாட்கள் முழுவதும் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை அன்லிமிடெட் சலுகையில் செய்து கொள்ளலாம். முதலில் பார்த்த திட்டத்தில் 1000 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்துக்கு வருடம் முழுவதும் வேலிடிட்டி கிடைப்பதால், 3600 எஸ்எம்எஸ்களை கொடுத்து உள்ளது.
இந்த எஸ்எம்எஸ்களுக்கும் தினசரி லிமிட் பொருந்தாது. ஆகவே, தேவைக்கு ஏற்ப அனுப்பி கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே ஜியோ ஆப்கள் இதிலும் கிடைக்கின்றன. ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆப்களை பயன்படுத்தலாம். இந்த ஆப்களில் இலவச அனுகல்கள் மட்டுமே கிடைக்கும். ஆகவே, பிரீமியம் சலுகைகளை எதிர்பார்க்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications