Jio SIM, Airtel SIM எதுவா இருந்தாலும் மாசம் ரூ.170 தான்.. கிட்டத்தட்ட 3 மாசத்துக்கு சிம் வேலிடிட்டி!
ஜியோ VS ஏர்டெல் என்கிற போட்டிக்கு ஓய்வே இல்லை. ஏனென்றால் பலரும் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றன. அதில் ஒன்று ஜியோவாக உள்ளது; இன்னொன்று ஏர்டெல் ஆக உள்ளது. எதை மெயின் சிம் ஆக வைப்பது, எதை செக்கென்ட சிம் ஆக வைப்பது என்பதை முடிவு செய்வது - அந்தந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை நிர்ணயம் தான்!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பாரதி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டுமே தங்கள் நுகர்வோருக்கு 'வாய்ஸ்-ஓன்லி' (அதாவது வாய்ஸ் கால்களை மட்டுமே வழங்கும்) திட்டங்களை வழங்குகின்றன. அதில் 84 நாட்கள் செல்லுபடியாகும் (கிட்டத்தட்ட 3 மாதங்கள்) செல்லுபடியாகும் திட்டங்களும் உள்ளன.

இப்படியாக ரிலையன்ஸ் ஜியோவிடம் (Reliance Jio) ரூ. 448 திட்டமும், பாரதி ஏர்டெல்லிடம் (Bharti Airtel) ரூ.469 திட்டமும் உள்ளது. இது இரண்டுமே 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகின்றன. மேலும் இத்திட்டங்கள் இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோருக்கு கிடைக்கின்றன.
உங்கள் சிம் கார்டை செயல்பாட்டில் வைத்து இருக்க உதவும், அதே சமயம் அதிக டேட்டா தேவைப்படாத ஒரு குறைந்த விலை திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இத்திட்டங்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இருப்பினும், இவற்றுக்கிடையே ஒரு வித்தியாசம் உள்ளது. அது என்னது?
ரிலையன்ஸ் ஜியோ ரூ.448 திட்டத்தின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.448 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1000 எஸ்எம்எஸ்கள் மற்றும் 84 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி ஆகியவைகள் கிடைக்கும். அதாவது இந்த திட்டத்தில் டேட்டா நன்மை எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் பயனர்களுக்கு JioTV மற்றும் JioAICloud ஆகிய சேவைகள் இத்திட்டத்துடன் கிடைக்கின்றன. ஆனால் இதுவும் கூடுதல் சலுகைகள் அல்ல; வழக்கமான சலுகைகளே ஆகும்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கையும் பயன்படுத்த முடியாது. 5ஜி நெட்வொர்க்கை அணுக, டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோ திட்டம் தேவைப்படும். இருப்பினும், தேவைப்படும்போது குறுகிய காலத்திற்கு டேட்டாவை பெற, ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இதன் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் என்பதால், இத்திட்டம் உங்கள் செலவை கணிசமாக குறைக்கும்.
பார்தி ஏர்டெல் ரூ.469 திட்டத்தின் நன்மைகள்: பார்தி ஏர்டெல்லின் ரூ.469 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டமும் 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது. மேலும் ஜியோவின் திட்டத்தை போலவே இதிலும் டேட்டா நன்மை எதுவும் இல்லை.
ஆக திடீர் டேட்டா தேவைகள் அல்லது குறுகிய கால டேட்டா தேவைகள் வந்தால் டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இருப்பினும், கூடுதல் சலுகையாக, ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்துடன் 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவிற்கான இலவச அணுகலை வழங்குகிறது. மேலும், பாதுகாப்பான நெட்வொர்க் சேவை (Safe Network Service) மற்றும் இலவச ஹலோ டியூன்கள் (Hellotunes) ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும்.
சரி ஜியோ அல்லது ஏர்டெல் - இதில் எந்த 84 நாள் வேலிடிட்டி திட்டம் சிறந்தது? இங்கு, இரண்டு திட்டங்களும் சமமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. உங்களுக்கு ஜியோவின் நெட்வொர்க் தேவைப்பட்டால் ஜியோவை தேர்ந்தெடுக்கலாம்; அதேபோல ஏர்டெல் தேவைப்பட்டால் அதையும் தேர்ந்தெடுக்கலாம். ஏர்டெல்லுடன் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவானது கூடுதல் நன்மையாக கிடைக்கிறது. இது நுகர்வோரின் முடிவெடுக்கும் விதத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையலாம்.


Click it and Unblock the Notifications