ஜியோ சிம் யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்ல 10+ ஓடிடி சந்தா.. தினசரி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
ஜியோ நிறுவனம் இந்த 2026-ம் ஆண்டு ஆரம்பமே பல அசத்தலான திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களில் சலுகைகளை வழங்கியது. அதேபோல் இந்நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் அதிக ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ 445 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 445 Prepaid Plan) தான் அதிக ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. அதன்படி சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) ஆகிய முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கும்.

சன்நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆப்களையும் ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக ஜியோகிளவுட் (JioCloud) சந்தாவை இந்த திட்டத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர ஜியோஹாட்ஸ்டார் சந்தா மூன்று மாதங்களுக்குக் கிடைக்கும்.
குறிப்பாக ஜியோ ரூ.445 திட்டம் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆகவே ஜியோ ரூ.445 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.
மேலும் ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதிக ஓடிடி மற்றும் தினசரி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.450 திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 450 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 36 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 72ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்..
அதேபோல் ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த ஜியோ திட்டத்தில் லைவ் டிவி சேனல்கள் மற்றும் பிரீமியம் ஓடிடி சந்தாவை தரும் ஜியோஹோம் (JioHome)சந்தா கிடைக்கிறது. ஆனால் இந்த சந்தா முதல் 2 மாதங்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும். இரண்டு மாதம் முடிந்த பிறகு கட்டணம் செலுத்தி திட்டத்தைத் தொடர்ந்து கொள்ளலாம். பின்பு இதில் வைஃபை டேட்டா (Wi-Fi Data) மற்றும் வைஃபை காலிங் (Wi-Fi Calling) சலுகைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








