ஒரே Jio ரீசார்ஜ்.. ரூ.445 போதும்.. வாய்ஸ் கால்கள்.. 12 மாசத்துக்கு Canva சந்தா.. 10 ஓடிடி ஆப்கள் சந்தா!
ஒரேவொரு ஜியோ ரீசார்ஜ் செய்தால் போதும், 12 மாதங்களுக்கு கேன்வா சந்தா, 18 மாதங்களுக்கு ஜெமினி சந்தா கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் 28 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ ரூ.445 திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.445 திட்ட விவரங்கள் (Jio Rs 445 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஆக்டிவ் திட்டம் தேவையில்லை. இதிலேயே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக தினசரிக்கு டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இது இருக்கிறது.

இந்த வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா சலுகை போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கொடுத்து இருக்கிறது. 2 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டாவை 4ஜி கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.
அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறும் கஸ்டமர்கள் எந்த லிமிட்டும் இல்லாமல், டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஜியோ ரூ.445 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.
இப்போது ஓடிடி ஆப்களின் சந்தாவுக்கு வருவோம். இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கிறது. இந்த ஓடிடி ஆப்பை மட்டும் தனியாக லாகின் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்யலாம். ஆனால், மற்ற ஓடிடி ஆப்களை தனித்தனியாக லாகின் செய்து பயன்படுத்த வேண்டியது கிடையாது.
சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மாராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் பேன்கோட் (FanCode) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவை இந்த ஜியோ ரூ.445 திட்டம் கொடுத்து இருக்கிறது.
இந்த ஓடிடி ஆப்களை தனித்தனியாக ஆர்டர் செய்ய வேண்டியது கிடையாது. ஜியோ டிவி ஆப் (JioTV App) வழியாகவே அணுகலாம். ஜியோ மொபைல் நம்பரை லாகின் செய்தால் போதும், இந்த ஆப்களில் கிடைக்கும் கன்டென்ட்களை அணுகலாம். இதுபோக பல்வேறு கூடுதல் சலுகைகளை இந்த ஜியோ ரூ.445 திட்டம் கொடுத்து இருக்கிறது.
ஆகவே, ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், ஜெமினி ப்ரோ சந்தாவுக்கு 18 மாதங்கள் கிடைக்கும். இது ப்ரோ சந்தாவாக இருப்பதால் நானோ பனானா (Nano Banana) கிடைக்கிறது. டிரைவ், ஜிமெயில் உள்ளிட்டவற்றில் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது.
இதுபோக கூடுதல் சலுகையைக கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) சந்தா சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.1590ஆக இருக்கிறது. இந்த சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோ ஏஐ கிளவுட் சந்தாவுடன் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகள் ரூ.445 விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
