Home
News

இதுபோதுமே சார்.. ரூ.445 க்கு அம்பானி சர்ப்ரைஸ்.. வாய்ஸ் கால்கள், டேட்டா.. 10 ஓடிடி ஆப்கள் சந்தா!

ஜியோ நிறுவனத்தின் கஸ்டமர்களில் ஓடிடி பிரியர்கள் இருந்தால், அவர்களை தட்டித்தூக்கும்படி ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. ஏனென்றால், ஓடிடி ஆப்களுடன் வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த சலுகைகளையும் கொடுக்கிறது. பல்வேறு கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஜியோ ரூ.445 திட்டம் (Jio Rs 445 Plan): 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கும். ஆனால், ஓடிடி சந்தா தொடங்கி அன்லிமிடெட் 5ஜி டேட்டா வரையில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுபோதுமே சார்.. ரூ.445 க்கு அம்பானி சர்ப்ரைஸ்.. வாய்ஸ் கால்கள்!

ஆகவே, 56 ஜிபி டேட்டா கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த சலுகைகள் போக ஜெமினி ப்ரோ சந்தா 18 மாதங்களுக்கு கிடைக்கும். இதில் நானோ பனானா அணுகல் கிடைக்கிறது.

5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. கூடுதலாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கிடைக்கிறது. இந்த கிளவுட் டேட்டாவில் 50 ஜிபிக்கு ஸ்டோரேஜ் கிடைக்கும். ஆகவே, கிளவுட் ஸ்டோரேஜ் அதிமாக கொடுக்கும் திட்டமாகவும் இது இருக்கிறது. ஓடிடி சலுகைகளுக்கப வரலாம்.

சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) மற்றும் சன்நெக்ஸ்ட் (Sun NXT) போன்ற முக்கிய ஓடிடி ஆப்களின் சந்தாவை இந்த திட்டம் கொடுத்துள்ளது. மேலும், கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மாராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன.

கிரிக்கெட் பிரியர்களுக்காக பேன்கோட் (FanCode) சந்தா உள்ளது. இந்த ஓடிடி ஆப்களை தனித்தனியே லாகின் செய்ய வேண்டியது கிடையாது. ஜியோ டிவி ஆப் (JioTV App) வழியாக ஒட்டுமொத்த ஆப்களையும் அணுக முடியும். ஆகவே, ஜியோ மொபைல் நம்பரை ஜியோ டிவி ஆப்பில் கொடுத்தால் போதும், சந்தாவை முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த ஓடிடி ஆப்களும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவா 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது இந்த திட்டத்தில் கிடைக்கும் சந்தா கிடையாது. ஜியோ ஏஐ கிளவுட் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஆகியவை கூடுதலாக சேர்க்கபட்ட சலுகைகளாக இருக்கிறது. ஆகவே, தனியாக 3 மாதங்களுக்கு சந்தா கிடைக்கிறது.

இந்த திட்டத்தை பெறுவது எப்படி? ஜியோ.காம் போர்டலுக்கு செல்லுங்கள். மேலே இருக்கும் மொபைல் டேப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விருப்பம் இருக்கும். இதை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, பொழுதுபோக்கு திட்டங்கள் (Entertainment Plans) விருப்பத்துக்கு செல்ல வேண்டும். இதில் மல்டி ஓடிடி திட்டங்கள் (Multi OTT Plans) இருக்கும்.

இதை கிளிக் செய்தால், இரண்டாவது திட்டமாக ஜியோ ரூ.445 திட்டம் இருக்கிறது. இதன் சலுகைகள் காண்பிக்கப்படும். இதை சரிபார்த்துவிட்டு, ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதே திட்டம், மைஜியோ ஆப் (MyJio App) வழியாகவும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. நேரடியாக யுபிஐ ஆப்களில் செய்வதற்கு பதிலாக இதில் செய்தால், கூடுதல் கட்டணம் இருக்காது.

Best Mobiles in India

English summary
Jio Rs 445 Plan With 10 OTT Subscriptions 56 GB Data Unlimited Voice Calls Check OTT Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X