Home
News

அதான் சார் அம்பானி.. 2026 முதல் மாசமே புதுசா ரூ.450 க்கு முடிச்சாச்சு.. அப்போ பழைய ரூ.445 திட்டம் எப்படி?

ஜியோ நிறுவனத்தின் 36 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக ரூ.450 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 28 நாட்கள் மற்றும் 30 நாட்கள் இல்லாமல் முதல்முறையாக 36 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்துள்ளது. ஏற்கனவே கிடைத்த ரூ.445 திட்டத்தை விட கூடுதல் சலுகைகளை கொண்டுள்ளது. ஆனால், ஓடிடியில் பழைய திட்டத்தைவிட குறைவாகவே ஆப்களை கொடுத்துள்ளது.

ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற திட்டமாக ஜியோ ரூ. 445 திட்டம் இருக்கிறது. இதில் 10+ ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கும். ஆனால், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தில் ஓடிடி சலுகை அதிகமாக இருக்காது. இருப்பினும், பிரீமியம் ஓடிடி சந்தா கொடுக்கப்படும்.

அதான் சார் அம்பானி.. 2026 முதல் மாசமே புதுசா ரூ.450 க்கு முடிச்சாச்சு!

ஜியோ ரூ. 445 திட்ட விவரங்கள் (Jio Rs 445 Plan Details): சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மாராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), பேன்கோட் (FanCode), ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜியோ டிவி ஆப் (JioTV App) கிடைத்துள்ளது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Local, STD & Roaming Voice Calls) இந்த திட்டம் கொடுத்துள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் அனுப்பி கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுத்துள்ளது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது.

இந்த 4ஜி டேட்டா சலுகை போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை இந்த திட்டம் கொடுத்துள்ளது. கூடுதல் சலுகைகளை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மொபைல் & டிவி சந்தாவை கொடுத்துள்ளது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். ஜியோஹோம் (JioHome) சந்தா மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கிடைக்கிறது.

இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தாவையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். ஆனால், ஓடிடி, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவுக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் சந்தா மட்டும் 3 மாதங்களுக்கு கிடைக்கும்.

ஜியோ ரூ. 450 திட்ட விவரங்கள் (Jio Rs 450 Plan Details): ஓடிடி சலுகைகளை இந்த புதிய ஜியோ திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், முந்தைய திட்டத்தைவிட கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, இதில் 36 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். இதிலும் ஹாட்ஸ்டார் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். மற்ற சலுகைகளுக்கு 36 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கும். அதாவது, ஜியோஹோம், ஜெமினி, கிளவுட் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 445 Plan Vs Jio Rs 450 Plan 2GB Daily Data Unlimited Local STD Voice OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X