ஜியோ Vs ஏர்டெல்.. ஒரே ரீசார்ஜ் 22+ ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. இலவச 5ஜி டேட்டா.. எதுல ஆஃபர் சூப்பர்?
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகியவை அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களுடன் ஓடிடி பண்டில் அடங்கிய திட்டங்களை வைத்திருக்கின்றன. இந்த ஓடிடி திட்டங்கள் முறையே ரூ.445 மற்றும் ரூ.449 விலைக்கு கிடைக்கின்றன. இவற்றின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். எது அதிக சலுகைகளை கொடுக்கிறது என்பதையும் இறுதியில் பார்க்கலாம். முதலில் ஜியோவில் இருந்து தொடங்கலாம்.
ஜியோ ரூ 445 ஓடிடி திட்டம் (Jio Rs 445 OTT Plan): ஓடிடி சலுகைகளுக்கு முன்பாக மற்ற சலுகைகளை பார்க்கலாம். இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் நாளொன்றுக்கு கிடைக்கின்றன. அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இப்போது, ஓடிடி சலுகைகளுக்கு வருவோம். இந்த ஓடிடி திட்டத்தில் சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் சன்நெக்ஸ்ட் (Sun NXT) போன்ற அதிக பிரியர்களை கொண்ட ஓடிடி ஆப்கள் இருக்கின்றன. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+) வருகிறது.
இதுபோக கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal) மற்றும் ஃபேன்கோட் (FanCode) ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. அதேபோல ஹோய்சோய் (Hoichoi) ஆப் சந்தாவும் கிடைக்கிறது. இறுதியாக ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கிறது. இந்த ஓடிடிகளுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கு மட்டும் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஏனென்றால், இது ஜியோ அன்லிமிடெட் ஆஃபரில் கீழ் கூடுதலாக சேர்க்கப்பட்ட சலுகையாகும். ஆகவே, திட்டத்தைவிட கூடுதல் நாட்களுக்கு பயன்படுத்த முடியும். இப்போது, ஏர்டெல் திட்டத்தை தெரிந்து கொள்ளலாம். இதிலும் ஓடிடி பண்டில் சலுகைகள் கிடைக்கின்றன.
ஏர்டெல் ரூ 449 ஓடிடி திட்டம் (Airtel Rs 449 OTT Plan): இந்த ஏர்டெல் திட்டத்துக்கு முந்தைய திட்டத்தை போலவே 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இதில் பெற்று கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data), 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு செய்து கொள்ள முடியும். ஓடிடி சந்தாவை பார்க்கையில், இது தனித்தனியாக சந்தா கொடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Plan Premium) சந்தாவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பிரீமியம் உள்பட 22+ ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும்.
இதிலும் சோனிலிவ், லயன்ஸ்கேட் பிளே ஆப்களின் சந்தா இருக்கிறது. அதேபோல ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi) ஆப்கள் வருகின்றன. சீரியல்களுக்கு அதிகமாக பார்க்கப்படும் சன்நெக்ஸ்ட் சந்தாவும் இதில் கிடைக்கிறது. இதேபோல 22+ ஓடிடி ஆப்கள் இந்த திட்டத்துக்கு கிடைக்கின்றன. இறுதியாக பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சலுகை கிடைக்கிறது.
இந்த ஓடிடிகளை 28 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இந்த ஏர்டெல் திட்டத்தின் தினசரி டேட்டா அதிகமாக இருந்தாலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா பொதுவாக இருப்பதால், ஜியோ சலுகைகள் முந்துகிறது. ஏனென்றால், ஜியோஹாட்ஸ்டார் சலுகை 90 நாட்களுக்கு வருகிறது. அதேபோல ஜீ5, போன்கோட் போன்ற தமிழ்நாட்டில் அதிகம் விரும்பப்படும் ஓடிடிகள் ஜியோவில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








