ஒரே ஜியோ திட்டம்.. இத விட்டா வேற இல்ல.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. ஃபேன்கோட் சந்தா!
ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் கிடைக்காத ஓடிடி சந்தா ஒன்று ஜியோ (Jio) நிறுவனத்தில் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2.5 ஜிபி டேட்டா சலுகையுடன் கிடைக்கிறது. அந்த எந்த ஓடிடி? இந்த ஜியோ திட்டத்தின் முழு சலுகைகள் எப்படி? இதோ விவரங்கள்.
நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி தளங்கள் இருந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களின் பேவரட் ஓடிடி தளமாக ஃபேன்கோட் (Fancode) இருக்கிறது. ஆனால், இந்த சந்தாவானது மற்ற ஓடிடிகளை போல கிடைக்கவில்லை. சொல்லப்போனால், ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் இந்த ஓடிடியுடன் எந்தவொரு ரீசார்ஜ் திட்டமும் இல்லை.

ஆனால், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அந்த ஓடிடி சந்தாவை ஒரேவொரு திட்டத்தில் கொடுக்கிறது. அதுவும் அதிக விலை கொண்ட வருடாந்திர திட்டத்தில் (Yearly Plan) மட்டுமே கொடுக்கிறது. இருப்பினும், சலுகைகளுக்கு ஏற்ப விலை இருப்பதால், அந்த திட்டத்தை குறை சொல்ல முடியாது. முதலில் அதில் என்னென்ன சலுகைகள் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
ஜியோ ரூ 3999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3999 Prepaid Plan): ஜியோ நிறுவனத்தில் அதிக விலை கொண்ட திட்டமாக இது இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.4000 விலைக்கு கிடைக்கிறது. இவ்வளவு விலைக்கு ஏற்ப டேட்டா சலுகையை வாரி வழங்கி இருக்கிறது. அதாவது, வருடம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், 2.5 ஜிபி தினசரி டேட்டாவை கொடுக்கிறது.
இந்த டேட்டா சலுகைகள் போக வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு அடுத்தபடியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) 365 நாட்கள் முழுவதும் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ஜியோ வருடாந்திர திட்டத்தில் அனுப்பி கொள்ளலாம். ஜியோ ஆப்கள் கிடைக்கின்றன.
ஆகவே, ஜியோ டிவி (Jio TV), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கிடைக்கிறது. இதில் ஜியோ ஏஐ கிளவுட் மூலம் 50 ஜிபி இலவச ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுக்கு அடுத்து ஃபேன்கோட் சந்தா வருடம் முழுவதும் பயன்படுத்த கிடைக்கிறது. உங்களுக்கு ஃபேன்கோட் சந்தா வேண்டுமானால், இந்த திட்டத்தை தவிர வேறு ஆப்ஷன்கள் கிடையாது.
மேற்கண்ட சலுகைகள் ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு பிறகு கொடுக்கப்பட்டவையாகும். ஆனால், இப்போது அதில் கூடுதலாக ஒரு ஓடிடி சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இந்த சந்தா ஒரே ஒரு முறை மட்டும் இதில் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 90 நாட்களுக்கு அந்த ஓடிடியை பயன்படுத்தலாம். அதற்கு பிறகு கிடைக்காது. எந்த ஓடிடி அது?
இலவசமாக கிடைக்கிறது என்றால், அது ஜியோவின் ஓடிடியாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பது சரிதான். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மொபைல் சந்தாவே இலவசமாக பயன்படுத்த கிடைக்கிறது. ஐபிஎல் போட்டிகள் மூன்று மாதங்களுக்கு நடைபெற இருப்பதால், இந்த சந்தாவானது ஜியோ ரீசார்ஜ் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது, பெரும்பாலான திட்டங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








